தமிழ்நாடு

tamil nadu

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

By

Published : Jun 18, 2020, 7:11 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

மூன்றாவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை

டெல்லி: லடாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் இந்திய சீன ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வீரமரணம் அடைந்த பழனிக்கு ஆளுநர் புரோகித் இரங்கல்!

சென்னை: இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஹவில்தார் பழனியின் ஆன்மா சாந்தியடைய தான் இறைவனை வேண்டிக்கொள்வதாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன, ஆனால் பயன்படுத்தவில்லை - வெளியுறவுத் துறை அமைச்சர்

டெல்லி: லடாக் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலின்போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என்றும் 1996,2005 ஒப்பந்தங்களின்படி அந்த ஆயுதங்களை வீரர்கள் பயன்படுத்தவில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் நடமாடும் கரோனா ஆய்வகம்!

டெல்லி: போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் பரிசோதனை செய்வதற்காக நடமாடும் கரோனா ஆய்வகத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடக்கி வைத்தார்.

கூட்டம் கூட்டமாக சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள்!

சென்னை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையிலிருந்து வெளியேறிவருகின்றனர்.

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 64ஆக குறைந்தது!

சென்னை: மாநகராட்சி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 369லிருந்து 64ஆக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'அனைவருக்கும் முன் மாதிரியாக உள்ளீர்கள்' - மதுரை மாணவி நேத்ராவைப் பாராட்டி ஆளுநர் கடிதம்

மதுரை: "இந்திய தேசத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் முன் மாதிரியாக செயல்பட்டுள்ளீர்கள்" என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவி நேத்ராவை பாராட்டியுள்ளார்.

இந்திய எல்லைகளை சேர்த்து புதிய வரைபடம்: சீண்டும் நேபாளம்

நேபாளத்தின் புதிய வரைபடத் திருத்த மசோதாவை (கோட் ஆப் ஆர்ம்ஸ்) அந்நாட்டு அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வரைபடம் இந்திய எல்லைப் பகுதிகளான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றின் மீது உரிமை கோரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சருக்கு ஐடியா கொடுக்கும் சேரன்!

கரோனா வைரஸ் தொற்று இல்லாதவர்களை, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐசிசி தலைவர் மீது பிசிசிஐ குற்றச்சாட்டு

ஐபிஎல் தொடர் பற்றிய இறுதி முடிவுகளை எடுக்காமல் இருப்பதாக ஐசிசி தலைவர் ஷாஷங்க் மனோகர் மீது பிசிசிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details