தமிழ்நாடு

tamil nadu

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 12, 2020, 7:08 PM IST

Published : Jun 12, 2020, 7:08 PM IST

7 pm
7 pm

ஊரடங்கில் தீ மிதித் திருவிழா - தடுத்து நிறுத்திய போலீஸ்!

விழுப்புரம்: கரோனா ஊரடங்கு சமயத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

நீதிமன்றங்கள் திறந்தால் மட்டுமே பிரச்னை தீரும் - பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ்

சென்னை; நீதிமன்றங்கள் திறந்தால் மட்டுமே வழக்கறிஞர்களின் பிரச்னை தீரும் என்று பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்தார்.

இ-பாஸ் வழங்க லஞ்சம் கேட்ட ஊழியர்கள் கைது!

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் வழங்க 2,500 ரூபாய், லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குள்ள மனிதர்கள் வாழ்ந்த கல்திட்டை : பாதுகாக்குமா தொல்லியல் துறை?

கிருஷ்ணகிரி : குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் கல்திட்டை குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தான ஊழியருக்கு கரோனா உறுதி!

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.

மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோனா; பீதியில் அரசியல் பிரமுகர்கள்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான தனஞ்செய் முண்டேவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புன்னகை இளவரசி நீரஜா புகைப்படத் தொகுப்பு

புன்னகை என்னும் விளக்கேற்றி வைத்தாள்

கடந்த கால நிகழ்வை நினைவுகூர்ந்த நடிகர் சிவக்குமார்

சென்னை: குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த பொன்னான நாட்கள் என்று தனது கடந்த கால நிகழ்வை நடிகர் சிவகுமார் நினைவுகூர்ந்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: பாகிஸ்தான் அணியில் யு-19 வீரர் ஹைதர் அலி...!

லாகூர்: இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணியில் இளம் வீரர் ஹைதர் அலி இடம்பிடித்துள்ளார்.

இலங்கை, ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு: பிசிசிஐ

ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் தொடர்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details