தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - regional

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

chennai
chennai

By

Published : Jun 19, 2020, 6:58 PM IST

இரண்டு முறை கோவிட்-19 கண்டறிதல் சோதனை நடத்த வேண்டும் - பூங்கோதை எம்.எல்.ஏ கோரிக்கை

தென்காசி : வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கட்டாயம் இரண்டு முறை கரோனா கண்டறிதல் சோதனை நடத்த வேண்டும் என, ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை திருநெல்வேலி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிமராமத்து பணிகள் குறித்து பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர்: குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ஏரிகள் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

சீரிய முறையில் செயலாற்றும் தமிழ்நாடு அரசு - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி : கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயலாற்றி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

'டாஸ்மாக் பாதுகாப்பிற்காக காவலர்களா?': தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை:‌ டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பைக் குறைத்து, கரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளுக்கு அதிக காவல் துறையினரை ஈடுபடுத்தக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளம்பரத்தில் இருந்தே பொருள்களை வாங்கலாம்: யூடியூப் முயற்சி

யூடியூப் தளத்தின் பிரதான வருவாயான விளம்பரங்களை மேம்படுத்த, விளம்பரதாரர்களுக்கு ஏதுவாக புதிய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் விளம்பரத்திலிருந்தே பிடித்த பொருள்களை பதிவு செய்து கொள்ள முடியும் என யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை பகல் 12 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்

புதுச்சேரி: அண்டை மாநிலத்தவர் நாளை(ஜூன் 20) பகல் 12 மணிக்குள் சுகாதார நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

’இது ஸாக் ஸ்னைடர் வெர்சன்!’ - ஜஸ்டிஸ் லீக் டீஸர் வெளியீடு

ஸாக் ஸ்னைடர் இயக்கிய ’ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி உள்ளது.

சுஷாந்த் சிங் நினைவில் வாடும் வளர்ப்பு நாய் ஃபட்ஜ் - நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாயான ’ஃபட்ஜ்’ அவரை நினைத்து சோகமாக படுத்து கிடக்கும் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பிரீமியர் லீக்: லீக் சுற்றின் போட்டிகான அட்டவணை அறிவிப்பு!

இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் ஜூலை 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிரீமியர் லீக் கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

பட்டப்படிப்பை நிறைவு செய்த மலாலா; நெட்ஃபிளிக்ஸில் நேரத்தை செலவிடுகிறாராம்!

நோபல் பரிசு பெற்ற இளம்பெண் மலாலா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள நிலையில், அடுத்தகட்ட திட்டம் எதுவுமின்றி நெட்ஃபிளிக்ஸில் பொழுதைக் கழித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details