தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - காலை 7 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top-10-news-at-7-am
top-10-news-at-7-am

By

Published : Oct 11, 2021, 7:24 AM IST

1. நிலக்கரி தட்டுப்பாடு: மின் தடை ஏற்பட அதிக வாய்ப்பு

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், சில மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மின்தடை ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2. ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம்; முதலமைச்சர் ஆய்வு!

தமிழ்நாடு முழுவதும் இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதையடுத்து, சென்னை சின்னமலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

3. 'பாரம்பரிய விளையாட்டை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை'

கிராமப்புற கலைகள், பாரம்பரிய விளையாட்டை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

4. வரதட்சணை கொடுமையால் பெண் மரணம்: கொலையா, தற்கொலையா?

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கொடுத்துள்ள புகாரின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

5. அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் அமைச்சரிடம் புகார்!

அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் புகார் தெரிவித்தனர்.

6. புதுச்சேரியில் கனமழை; வாகன ஓட்டிகள் சிரமம்!

புதுச்சேரியில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

7. தமிழ்நாட்டில் புதிதாக 1,329 பேருக்கு கரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 329 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

8. நல்ல நேரம் யாருக்கு🕕 - அக்டோபர் 11

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

9. அரண்மனை 3 - விவேக் குறித்து சுந்தர். சி உருக்கம்

விவேக் திடீரென இறப்பார் என எதிர்பார்க்கவே இல்லை, படப்பிடிப்பின்போது உடற்பயிற்சி, உடல் நலம் குறித்து எங்களுக்கு அறிவுறுத்தியபடி இருப்பார் என இயக்குநர் சுந்தர். சி பேசியிருப்பது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

10.IPL 2021 QUALIFIER 1: பிருத்வி ஷா, பந்த் அரைசதம்; 173 ரன்களை சேஸ் செய்யுமா சிஎஸ்கே

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில், பிருத்வி ஷா, ரிஷப் பந்த் அரை சதத்தால் டெல்லி அணி 20 ஓவர்களுக்கு 172 ரன்களை எடுத்தது.

ABOUT THE AUTHOR

...view details