தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - Today news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS @ 7 AM
TOP 10 NEWS @ 7 AM

By

Published : Aug 12, 2021, 7:06 AM IST

அறுவை சிகிச்சை முடிந்தது - நன்றி தெரிவித்த பிரகாஷ்ராஜ்

ஹைதராபாத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து பிரகாஷ்ராஜ் நலமாக இருக்கிறார்.

நீட் தேர்வு: 11,236 அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பம்!

தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வினை எழுத 11 ஆயிரத்து 236 அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.

கூழ் ஊற்றும் திருவிழா - 20 நபர்களுக்கு கரோனா

கரோனா விதிமுறைகளை மீறி திரு.வி.கா மண்டலத்தில் நடந்த கூழ் ஊற்றும் திருவிழாவில் பங்கேற்ற 20 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

சிம்புதேவனின் 'கசட தபற' ரிலீஸ் தேதி வெளியீடு

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கசட தபற' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தி சாட்டிலைட் விற்பனையில் சாதனை படைத்த லிங்குசாமியின் 'RAPO 19'

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் 'RAP0 19' படம் 50 சதவிகிதம் முடிந்துள்ளது.

மேகதாது விவகாரம்: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தேசிய இளைஞர் விருதுகள் வழங்கல்!

2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் விருதுகளை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் வியாழக்கிழமை வழங்குகிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்: குன்னூருக்கு வந்த அசோக் குமாருக்கு உற்சாக வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு காணொளி பகுத்தாய்வாளராக பங்கேற்ற அசோக் குமார் டோக்கியோவில் இருந்து குன்னூருக்கு திரும்பியதைத் தொடர்ந்து நீலகிரியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details