தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-7-am
top-10-news-at-7-am

By

Published : Aug 3, 2021, 7:17 AM IST

1.மீண்டும் தலைதூக்கும் கரோனா: நாளை அமைச்சரவைக் கூட்டம்

நிதிநிலை அறிக்கை, தொழில் முதலீடு, மேகதாது அணை விவகாரம், கரோனா அதிகரிப்பு ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க நாளை (ஆகஸ்ட் 4) தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

2.பொள்ளாச்சி பாலியல் வழக்கு - விரைந்து முடிக்க காவல் துறை துணை நிற்கும்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க, அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஐக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.பெற்றோரை இழ‌ந்த குழந்தைகளுக்கு நிவாரணம்

சேலம், அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டி பகுதியில், பொருளாதார நிலையில் நலிவடைந்த குழந்தைகள், பெற்றோரை இழ‌ந்த குழந்தைகளுக்கு நிவாரணம், சத்துணவு, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள், சேலம் டான் போஸ்கோ அன்பு இல்லம் சார்பாக வழங்கப்பட்டது.

4.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி கோரிய மனு- விளக்கமளிக்க உத்தரவு

விழுப்புரத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தாக்கல்செய்த மனு குறித்து ஆகஸ்ட் 4ஆம் தேதி விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5.ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவங்க இதை பயன்படுத்திக்கோங்க..!

புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் புகைப்பட இதழ்கள் தொடர்பான 'சுயம்' இலவச இணைய புதிய பாட வகுப்புகளை துணைவேந்தர் குர்மீத் சிங் தொடங்கிவைத்தார்.

6.அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

பழையபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

7.டுமீல் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் வெட்டிக்கொலை

சென்னை பிரசிடென்சி கல்லூரி மைதானம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8.இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 3

நேயர்களே... மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

9.'நாங்க வேற மாறி' மிரட்டும் தல

தல அஜித்தின் வலிமை படத்தில் யுவன் பாடிய 'நாங்க வேற மாறி' பாடல் வெளியானது.

10.தேவி ஶ்ரீ பிரசாத்துக்கு ராம் பொத்தினேனி வாழ்த்து!

இசை அமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்துக்கு நடிகர் ராம் பொத்தினேனி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details