தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - chennai district news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

7AM
7AM

By

Published : May 7, 2021, 7:10 AM IST

1.முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் கையெழுத்திடும் முதல் கோப்பு?

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ள நிலையில், கரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைகளுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2. மு.க. ஸ்டாலின் ஆகிய நான்...

2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு மிக நெருக்கத்தில் திமுக வந்ததற்கு ஒரே காரணம் ஸ்டாலின். ஏ

3.கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா? மா.சுப்ரமணியன்!

சென்னை: கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா? மா.சுப்ரமணியன் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

4.டேங்கரில் இருந்து கசிந்த ஆக்ஸிஜன் - பொதுமக்கள் அதிர்ச்சி!

ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் டேங்கர் ஒன்றில் இருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கசிந்ததை அடுத்து, ரயில்வே துறை விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
5.பயணிகள் குறைவு காரணமாக சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: பயணிகள் குறைவு காரணமாக ஏராளமான ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது.

6.புதுச்சேரி முதலமைச்சர் அறையைப் புனரமைக்கும் பணிகள் தீவிரம்

புதுச்சேரி: முதலமைச்சராக ரங்கசாமி நாளை(மே.7) பதவியேற்க உள்ள நிலையில், சட்டப்பேரவை வளாகத்திலுள்ள முதலமைச்சர் அறை மற்றும் வளாகத்தை வர்ணம் பூசி புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

7.சாமி என்னை விட்டுடுங்க..கதறும் பெண்- கொடூரமாகத் தாக்கும் காணொலி!

நாமக்கல்: போதைப் பொருள்களுக்கு அடிமையான பெண்ணை கொடூரமான முறையில் தாக்கும் சாமியாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

8. திமுக ஆட்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ்க்கு முக்கிய பதவி?

தேர்தல் பரப்புரையின்போது ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது, நூறு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
9.ஒரே மருத்துவமனையில் குவியாதீர்கள் - ‘104’ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்!

சென்னை: நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளில் காலியாகவுள்ள நிலவரத்தை அறிவதற்காக 'கோவிட் பெட் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
10.விறுவிறுப்பாக நகரும் மாநாடு பட வேலைகள்

சென்னை: நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் நேற்று (மே.06) பூஜையுடன் தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details