தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - latest news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 7 am
காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM

By

Published : Apr 8, 2021, 7:04 AM IST

கரோனா: முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

கரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 8) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - தமிழிசை வலியுறுத்தல்

புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக 20 இடங்களிலும் வெற்றிபெறும் - எல். முருகன் நம்பிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்ட 20 இடங்களிலும் வெற்றிபெறும் என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

'திண்டுக்கல்லில் கோடை காலத்தில் குடிநீர்ப் பிரச்சினை வராது' - அலுவலர்கள் நம்பிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர்ப் பிரச்சினை வராது, குடி தண்ணீர் குறித்து அச்சப்படத் தேவையில்லை என அலுவலர்கள் மக்களுக்கு நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து சீல்வைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்டத் தேர்தல் அலுவலர் சிவனருள் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வைத்து சீல்வைக்கப்பட்டன.

'அச்சம் தவிர்' - தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பிரதமரின் அறிவுரை

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருந்து அவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: நேரில் முன்னிலையாக சிதம்பரத்துக்கு விலக்கு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் நேரில் முன்னிலையாக மத்தியமுன்னாள்நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் ஆகியோருக்கு விலக்கு அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க பாஜக தலைவர் கான்வாய் மீது தாக்குதல்!

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கான்வாய் மீது கூச் பெஹர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரி நிர்ணயம்செய்ய ரூ.15,000 கையூட்டு வாங்கிய பில் கலெக்டர் கைது!

புதிய வீட்டிற்கு வரி நிர்ணயம்செய்வதற்காக ரூ.15,000 கையூட்டு வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர்.

மாமனிதன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details