தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 7 AM - திருமணமான ஆண்களைக் குறி வைக்கும் பேய்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ..

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
Top 10 News @ 7 AM

By

Published : Mar 31, 2021, 7:02 AM IST

'எனது எஞ்சிய வாழ்நாள்கள் மக்களுக்காகவே' - கமல் ஹாசன்

மதுரை: என்னுடைய எஞ்சிய வாழ்நாள்களை மக்களுக்காக செலவழிக்க தயாராக இருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

'கடல் அட்டை மீதான தடை நீக்கப்படும்' - டிடிவி தினகரன்

கடல் அட்டை மீதான தடை நீக்கப்படும் என்று ராமநாதபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

45 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி

தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குள்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி போட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் சூரியக் கோயில்!

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காஷ்மீர் சூர்யக் கோயில் தற்போது சிதிலமடைந்து வருகிறது. காஷ்மீரின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் ஆர்வமுள்ள பலர், சூரியனாரின் ஆலயத்தை பாதுகாக்க வேண்டும், புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

திருமணமான ஆண்களைக் குறி வைக்கும் பேய்?

புவனேஷ்வர்: குண்டூரிபாடியில் திருமணமான ஆண்கள் அடுத்தடுத்து சந்தேகத்திற்கிடமானவகையில் உயிரிழப்பது, பேய் பயத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

ஆ. ராசா மீது மாணவிகள் புகார்

சென்னை: பெண்களை இழிவாக பேசிய ஆ. ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவிகள் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

'திமுகவினருக்கு நாக்கில் சனி' - இஸ்திரி போட்ட அமைச்சர் தாக்கு

திமுகவினருக்கு நாக்கில் சனி பிடித்துள்ளது. அதுவே அவர்களுக்கு எமனாக மாறப்போகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

'முதலமைச்சர் பழனிசாமி பாம்பு, பல்லி அல்ல.. பச்சோந்தி..' - டிடிவி தினகரன்

முதலமைச்சர் பழனிசாமி தன்னுடைய பதவிக்கு பாம்பு, பல்லி போன்று தவழ்ந்து போனாரா என்பதைவிட அவர் ஒரு பச்சோந்தி என்பதுதான் உண்மை என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி பாராட்டு

ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐ ட்ரீம் மூர்த்தி, தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர்களை அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

'தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணமா?' - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா என சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details