தமிழ்நாடு

tamil nadu

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

By

Published : Jan 25, 2021, 7:11 AM IST

Published : Jan 25, 2021, 7:11 AM IST

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்

1 தமிழ் கலாசாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: ராகுல் காந்தி

திருப்பூர்: தமிழ் கலாசாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி கூறினார்.

2 வாழை நார் ஆர்கானிக் ஷேவிங் பிரஷ் தொழிலில் சாதித்த இளம்பெண்

கரோனா தொற்று காலத்தில் பாதுகாப்புடனும், சுகாதாரமாய் இருக்க வேண்டியது அவசியம். இந்த சூழலில், சலூன் கடைகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஷேவிங் பிரஷ்களால் ஹொபடைட்டிஸ் தொற்று பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. அதைத் தடுக்க ஆர்கானிக் முறையில் வாழை நாரில் ஷேவிங் பிரஷ் உற்பத்தி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் மாதால சௌஜன்யா என்ற ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண்.

3 தமிழ்நாடு கோவிட்-19 பாதிப்பு: 569 பேருக்கு தொற்று உறுதி; 642 பேர் குணமடைந்தனர்!

தமிழ்நாட்டில் புதிதாக 569 நபர்களுக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும், 642 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

4 மெரினாவில் குடியரசு தின இறுதி ஒத்திகை!

மெரினா காமராஜர் சாலையில், குடியரசு தின விழாவிற்கான இறுதி நாள் ஒத்திகை நடைபெற்றது.

5 அமைச்சர் வளர்மதியின் கார் மீது லாரி மோதல்: தற்செயலா, சதியா?

திருச்சி: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வந்த கார் மீது லாரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 50 ஆண்டுகால அரசியல் உறவு... கொள்கை... அன்பின் நீட்சி... லாலு குணமடைய நிதிஷ் வாழ்த்து!

பாட்னா: லாலு பிரசாத் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7 'பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி': முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: பாஜக ஒரு டுபாக்கூர் கட்சி, அவர்களோடு கூட்டணி வைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

8 இங்கிலாந்து அணி வீரர்கள் சென்னை வருகை!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி வீரர்கள் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தனர்.

9 அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு படையெடுத்த டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்!

கடந்த 2013-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும், மதிப்பு காண் (வெயிட்டேஜ்) முறையால் பணி வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள், பணி வாய்ப்பு வழங்க வலியுறுத்தி கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு படையெடுத்தனர், அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

10 ரஷ்யாவில் போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் கைது: அமெரிக்கா கண்டனம்!

வாஷிங்டன்: ரஷ்யாவில் போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details