தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM - ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

Top 10 news @5pm
Top 10 news @5pm

By

Published : Apr 5, 2021, 5:00 PM IST

பணப்பட்டுவாடா புகாரால் தொகுதிகளில் மறு தேர்தலா? - சத்யபிரத சாஹூ பதில்

அதிக பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பகுதிகளில் புகார் பெறப்பட்ட வேட்பாளர்கள் தகுதி நீக்கம் குறித்து, தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சசிகலா பெயரை சேர்க்காவிடில் தேர்தலை ஒத்திவையுங்கள்- அமமுக ஆவேசம்

சசிகலா பெயரை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் ஆயிரம் விளக்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அமமுக ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் வேட்புமனுவை தகுதி நீக்க முறையீடு!

கடந்த 5 ஆண்டுகளாக தொலைபேசி கட்டணம் செலுத்தாததோடு அதனை வேட்புமனுவிலும் மறைத்த திருமங்கலம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமாரை தகுதி நீக்கக்கோரி அமமுக வேட்பாளர் முறையிட்டுள்ளார்.

உலகின் மிகச்சிறிய வாக்குப்பதிவு இயந்திரம் - அசத்திய கைவினைக் கலைஞர்!

உலகின் மிகச்சிறிய வாக்குப்பதிவு இயந்திரத்தை தங்கத்தினால் செய்து புதுக்கோட்டையை சேர்ந்த கைவினைக் கலைஞர் அசத்தியுள்ளார்.

'அந்தக் கிராமத்துல போய் ஓட்டு போட்டா பிரச்சினை வரும்’: அல்லிகுளத்தில் தேர்தல் புறக்கணிப்பு

வெள்ளம்பல், வேடகரிசல்குளம் உள்ளிட்ட கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் வாக்களிப்பது தங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் அல்லிகுளம் கிராமத்தினர் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ராஜினாமா!

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்த சிபிஐக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தனது அமைச்சர் பதவியை தேஷ்முக் ராஜினாமா செய்துள்ளார்.

144 தடை உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காது- புதுச்சேரி ஆட்சியர் விளக்கம்

புதுச்சேரியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காது என தடை உத்தரவு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் விளக்கமளித்துள்ளார்.

கேபிள் டிவி டெக்னீஷியன் வெட்டிக் கொலை!

கூடுவாஞ்சேரி அருகே தண்டவாளத்தில் கேபிள் டிவி டெக்னீஷியன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹார் ஜமான் தவறவிட்ட இரட்டை சதம்; வென்றெடுத்த சாதனைகள்!

ஜமான் தனது இரண்டாவது இரட்டை சதத்தைத் தவறவிட்டாலும், ஒருநாள் போட்டி வரலாற்றில் இலக்கைத் துரத்தும்போது அதிக ரன்களை எடுத்தவர் என்ற தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.

ஓடிடியில் வெளியான யோகிபாபுவின் 'மண்டேலா'!

யோகிபாபு நடித்துள்ள 'மண்டேலா' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியது.

ABOUT THE AUTHOR

...view details