தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 5 PM - பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
Top 10 news @5pm

By

Published : Apr 3, 2021, 5:08 PM IST

பணம் விநியோகம் செய்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவை : தெற்கு சட்டபேரவை தொகுதிக்குள்பட்ட சலீவன் வீதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதி மீறியதாக குஷ்பு மீது வழக்கு

தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி வழிபாட்டு தலம் அருகில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நடிகை குஷ்பு மீது கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவிட்-19 பாதிப்புக்குள்ளான பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி

கோவிட்-19 பாதிப்புக்குள்ளான தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் - ராகுல் காந்தி

டெல்லி: விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தை கண்டித்துள்ள ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக ஊராட்சி மன்றத்தலைவர் வீட்டில் ஐடி ரெய்டு!

புதுக்கோட்டை: திருமயம் தொகுதிக்குட்பட்ட கோட்டையூர் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ராமத்திலகம் மங்களராமன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

பாமக வேட்பாளருக்குக் கூழ் உணவளித்த கிராமத்துப் பெண்!

தர்மபுரி : கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளருக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூழ் உணவளித்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சாதாரணப் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவது ஏன்?

சென்னையில் வழக்கத்திற்கு மாறாக சாதாரணப் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதற்கு தேர்தல் ஒரு காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது, இது குறித்து இச்செய்தியில் காண்போம்.

வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்தும், அதற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடத்தப்பட்ட என்கவுன்டரின்போது, பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஆர்.கே. நகரில் இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு பைக் பேரணி!

சென்னை: ஆர்.கே. நகரில் இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் பைக் பேரணி நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details