தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-5pm
top-10-news-at-5pm

By

Published : Jul 18, 2020, 5:16 PM IST

பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது - கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது என பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக கமல்ஹாசன் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

'ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு; கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு ட்வீட்' - நீதிமன்றத்திற்குச் செல்லும் திமுக

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு உருவாக்கி, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு ஆதரவாக ட்வீட் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

'முருகன் அவமதிப்பு; அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்ட ஸ்டாலின்' - அமைச்சர் வேலுமணி விமர்சனம்

சென்னை: தமிழர் கடவுள் முருகரை அவமதித்தவர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன் என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கு, சர்வதேச போலீஸ் உதவியை நாடும் என்.ஐ.ஏ!

கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்கக் கடத்தல் வழக்கில், சர்வதேச போலீசாரின் உதவியை என்.ஐ.ஏ. நாடுகிறது.

'துப்பு கொடுத்ததால் கொன்றோம்' - சடலத்துடன் துண்டுச் சீட்டை விட்டுச்சென்ற நக்சல்கள்

ராஞ்சி: நக்சல்கள் குறித்து காவலர்களுக்கு துப்பு கொடுத்ததாகக் கூறி, 30 வயது இளைஞரை நக்சல்கள் சிலர் கடத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 தொற்று: மாநிலங்களின் நிலவரம்

நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து லட்சத்து 38 ஆயிரத்து 716ஆக அதிகரித்துள்ளது.

சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியன் ரயில்வே

டெல்லி: சீன நிறுவனத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை இந்தியன் ரயில்வே ரத்து செய்ததது.

தமிழ்நாடு தற்போது சந்திக்கும் பிரச்னை: கண்டனம் தெரிவித்த வைரமுத்து

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் விதமாக, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரசுக்குத் தடுப்பூசி - வடகொரியா அறிவிப்பு

சியோல்: கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளதாக, வடகொரியா தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தகத்திற்கு தடை? - மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா திட்டத்தால், எந்தவொரு வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details