தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 5PM
Top 10 news @ 5PM

By

Published : Jul 5, 2020, 5:03 PM IST

'நீதிபதி பி.என். பிரகாஷ் பணியிட மாற்றம்... அச்சுறுத்தும் அதிமுகவின் அரசியல்' - திருமாவளவன்

சென்னை: காவல் துறையினரின் கொடூரத்தைச் சகித்துக்கொள்ளாத நீதிபதி பி.என். பிரகாஷின் பணியிடம் மாற்றப்பட்டிருப்பது அச்சுறுத்தும் அரசியல் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

'சீன விவகாரத்தில் மத்திய அரசை பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள்' - குலாம் நபி ஆசாத்

சீன விவகாரத்தில் மத்திய அரசை லடாக்கைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் விமர்சித்துவருவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

'ரயில்வேத் துறையில் தனியாரின் பங்களிப்பை அனுமதிக்கக்கூடாது' - காங்கிரஸ் எம்.பி கண்டனம்

விருதுநகர்: மத்திய அரசு ரயில்வேத் துறையில் தனியாரின் பங்களிப்பை தடுத்து நிறுத்தவேண்டும், இல்லையெனில் மறியலில் ஈடுபடுவேன் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பொது முடக்க விதிமுறைகளை மீறி அமோகமாக நடைபெறும் சாராய விற்பனை!

நாமக்கல் : முழு ஊரடங்கை மீறி சட்ட விரோதமாக நடைபெற்றுவரும் மது விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா அச்சுறுத்தல்: கர்நாடாகவில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!

பெங்களூரு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகாவில் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரையிலான அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உமீட் திட்டம்: வேலையற்ற இளைஞர்களின் வாழ்வை வளமாக்கும் பால் உற்பத்தி

ஒரு லிட்டர் பால் 28 ரூபாய்க்கு விற்பனை செய்வதிலிருந்து 572.32 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. உமீட் திட்டத்தின் கீழ், பெண்கள் உள்பட புல்வாமாவில் உள்ள இளைஞர்கள் பால் சங்கங்களை நிறுவி பயனடைந்து வருகின்றனர்.

பட்டப்படிப்பு, முதுகலை தேர்வுகளை ரத்து செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): 2019-20ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான பட்டப்படிப்பு, முதுகலை தேர்வுகளை ரத்து செய்ய ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அடிமை... தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து தப்பிக்க முயன்ற நபர் உயிரிழப்பு

லக்னோ: ராம்பூரில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து தப்பிக்க முயன்ற இளைஞர் ஒருவர் மூன்றாவது தளத்திலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

சுஷாந்த் சிங்கின் 'தில் பேச்சரா' டிரெய்லர் நாளை வெளியீடு!

நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான தில் பேச்சரா படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் கோப்பை: 20ஆவது முறையாகச் சாம்பியனான பெயர்ன் முனிச்!

ஜெர்மன் கால்பந்து கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பெயர்ன் முனிச் அணி 4-2 என்ற கோல் கணக்கில் லெவர்குசென் அணியை வீழ்த்தி 20ஆவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ABOUT THE AUTHOR

...view details