தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

Top 1`0 News 5 pm
Top 1`0 News 5 pm

By

Published : Oct 5, 2021, 5:33 PM IST

1.இரு-விரல் பரிசோதனை செய்யப்படவில்லை - விமானப்படை தலைமை மார்ஷல் விளக்கம்

பெண் விமானப்படை அலுவலருக்கு உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு-விரல் பரிசோதனை மேற்கொள்ளபடவில்லை என விமானப்படை தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.

2.வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க சாத்தியம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

3.2021 இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற மூவர்

2021ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இந்தாண்டு மூன்று பேருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

4.நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் மாணவ, மாணவிகளின் உயிரைப்பறிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

5.மனநலம் பாதித்தவர்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: சாலையில் திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர், தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6.தொடர் மழை எதிரொலி: கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல மக்களுக்குத் தடை!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

7.எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8.பிக்பாஸில் 2ஆவது நாளே அழுகாச்சியா.... புலம்பும் ரசிகர்கள்

பிக்பாஸ் 5 ஆவது சீசன் தொடங்கிய இரண்டாவது நாளே போட்டியாளர்களுக்கு அழுகும் டாஸ்க் கொடுக்கப்பட்டது, ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

9.புதுச்சேரி துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்த சிங்கப்பூர் தூதர்

சிங்கப்பூர் தூதர் பாங் காக் தியான், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் இன்று (அக்.5) சந்தித்துப் பேசினார்.

10.கோவிட்... 24 மணி நேரத்தில் 20 ஆயிரம் பேர் பாதிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 346 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details