தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 5 PM - etv news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS
TOP 10 NEWS

By

Published : Sep 24, 2021, 5:01 PM IST

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் கோரிக்கை குறித்து செப்டம்பர் 29-க்குள் அதிமுகவிற்கு விளக்கம் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- டெல்லியில் பரபரப்பு

வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு

மகாராஷ்டிரா மாநில பெண் காவலர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து, 8 மணிநேரமாக அரசு குறைத்துள்ளது. இதற்கான உத்தரவை காவல் துறை தலைவர் சஞ்சய் பாண்டே வெளியிட்டார்.

அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த சிறப்பு வாய்ப்பு!

பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிகை..!

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்கள் துணிகளை துவைக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு

பிகார் மாநிலத்தில் பாலியல் வழக்கில் கைதான குமார் என்பவருக்கு, பெண்களின் துணிகளை துவைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி பிணை வழங்கியுள்ளார்.

சிவப்பு ரேஷன் கார்டு இருந்தா இலவச சிகிச்சையா...!

புதுச்சேரி ஜிப்மரில், இனி சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்தால் மட்டுமே இலவச சிகிச்சை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் ஆலோசனை

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் - மறுபரிசீலனைக்கு உத்தரவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதகையில் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சி

உதகையில் இரண்டாவது சீசன் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. அதை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details