தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5 PM - மாலை 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm

By

Published : Sep 18, 2021, 5:01 PM IST

1. நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. ‘டாஸ்மாக் அருகிலேயே தடுப்பூசி முகாமை அமைக்க வேண்டும்’ - வானதி சீனிவாசன்

மது அருந்த செல்லும் ஆண்களுக்காக டாஸ்மாக் அருகிலேயே கரோனா தடுப்பூசி முகாமை அமைக்க வேண்டும் என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

3. சாரைப் பாம்பு கடித்த பயங்கரவாதி மருத்துவமனையில் அனுமதி

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதியை சாரைப் பாம்பு கடித்ததால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

4. பெண் மருத்துவரின் உயிரை காவு வாங்கிய சுரங்கப் பாதை!

புதுக்கோட்டை அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்தத மழை நீரில் காரில் கடந்து செல்ல முயன்ற அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5. பெற்றோருக்கு வாழ்நாள் தண்டனை கொடுக்காதீர்கள் - சூர்யா உருக்கம்

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், நடிகர் சூர்யா விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

6. ராசிபுரம் அருகே காணாமல்போன நீட் தேர்வு எழுதிய மாணவி

ராசிபுரம் அருகே காணாமல்போன நீட் தேர்வு எழுதிய மாணவியை டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை காவலர்கள் தேடிவருகின்றனர்.

7. பஞ்சாப் முதலமைச்சர் ராஜினாமா?

பஞ்சாப் முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் இன்று (செப்டம்பர் 18) ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் காத்திருக்கிறதா லித்தியம்..!

இந்தியாவில் பெருகி வரும் மின்சார வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா இல்லை பயனளிக்கிறதா என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

9. துல்கர் சல்மான் வெளியிட்ட ஹனுமான் ஃபர்ஸ்ட் லுக்

ஹனுமான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டார்.

10.மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி

'பிசாசு-2' கதையை சுருக்கமாக சொன்னார். ஒவ்வொரு கேரக்டரையும் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை சொல்லும்போது சினிமா கலைஞனாக பெருமிதம் அடைந்தேன்.

ABOUT THE AUTHOR

...view details