தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm

By

Published : Sep 16, 2021, 5:28 PM IST

1. 'திட்டங்களின் நிலையை தினமும் கண்காணிப்பேன்' - முதலமைச்சர் அதிரடி

துறை ரீதியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகை அமைக்கப்பட்டு எனது அறையில் திரை அமைத்து தினமும் கண்காணிப்பேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. ஐ.ஜி.முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

ஐ.ஜி.முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் மனுவை வரும் 23ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொள்கிறது.

3. நல்ல நேரம் போஸ்ட் - துரைமுருகன் மகனுக்கு கெட்ட நேரம்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவர துரைமுருகன் தீவிரமாக முயற்சித்ததாக பேச்சு அடிபட்ட சூழலில் கதிர் ஆனந்தின் இந்தப் பதிவு திமுகவின் பொதுச்செயலாளரும், அவரது மகனும் சாதிய மனப்பான்மையில் இருப்பதாகவே கருத தோன்றுகிறது என்கின்றனர் ஒரு தரப்பினர்.

4. பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

5. SPACEX: விண்வெளிக்கு சுற்றுலா சென்றிருக்கும் நால்வர்!

விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் 'ஸ்பேக்ஸ் எக்ஸ்' நிறுவனம் மூலம் நான்கு பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

6. பெரியார் பிறந்தநாள் - உறுதியேற்க அழைக்கும் திருமாவளவன்

பெரியார் பிறந்தநாள் அன்று அனைவரும் உறுதிமொழி ஏற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

7. நீட் தேர்வு - மாணவி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தீக்குளித்துத் தற்கொலை முயற்சி செய்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

8.இது 221ஆவது முறை - தேர்தல் மன்னனின் அலப்பறை

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு, தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் பத்மராஜன் என்பவர் 221ஆவது முறையாக சுயேட்சை வேட்பாளருக்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

9.கோலாகலமாக நடைபெற்ற டிடிவியின் மகள் திருமணம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமணம், திருவண்ணாமலையில் சசிகலா தலைமையில் கோலாகலமாக நடைபெறுகிறது.

10.டொரன்டோ திரைப்பட விழா - சிறந்த படம் கோட்டா

இயக்குநர் அமுதவாணனின் கோட்டா திரைப்படம் டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக தேர்வாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details