தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Aug 19, 2021, 5:03 PM IST

1. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடைக்கோரி வழக்கு- ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடைச் சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய- மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.கன்னியாகுமரி-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை செப்பனிடப்படும் - எ.வ. வேலு

கன்னியாகுமரி முதல் களியக்காவிளைவரை தேசிய நெடுஞ்சாலை செப்பனிடப்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

3.கார் கண்ணாடியை உடைக்கும் நிர்வாண ஆசாமி - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

சென்னையில் இரவு நேரத்தில் நிர்வாணமாக தெருக்களில் வலம் வந்து கார் கண்ணாடிகளை உடைத்துச் செல்லும் நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

4.லாரி மீது பைக் மோதி விபத்து - காவலர் படுகாயம்

சென்னையில் கொலை வழக்கின் விசாரணைப் பணியை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்ற காவலர் விபத்தில் சிக்கினார். அதில் அவர் படுகாயமடைந்தார்.

5.பிணை கோரிய மீரா மிதுனின் வழக்கு தள்ளிவைப்பு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் ஆகியோர் பிணை (ஜாமின்) கோரிய வழக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6.கஞ்சா விவகாரத்தால் திமுக பிரமுகரை வெட்டிய இளைஞர்கள்

கஞ்சா விற்பனை செய்ய சொல்லி தொல்லை கொடுத்ததால், திமுக பிரமுகரை வெட்டியதாக, தாமாக முன்வந்து சரணடைந்த இளைஞர்கள், காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

7.மீண்டும் ஊரடங்கு? கடுமையான கட்டுப்பாடுகள் ? - முதலமைச்சர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை(ஆகஸ்ட். 20) துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

8.கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9.முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க வந்த பெண் - காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க வந்த பெண் தலையில் கண்காணிப்பு கேமரா கம்பம் விழுந்தது. காயத்துடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10.’தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்றுக’ - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் ஆறு மாதங்களுக்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details