தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 5 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்.

5 மணி செய்தி சுருக்கம்
5 மணி செய்தி சுருக்கம்

By

Published : Aug 3, 2021, 5:22 PM IST

1 நாளை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை - ஏன் தெரியுமா?

நாளை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2 ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3 நெல்லையில் களையிழந்த ஆடிப் பெருக்கு விழா

நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு விழா, இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக உற்சாகம் இழந்து காணப்பட்டது.

4 காலாவதி உணவுப்பொருள்கள் விற்பனையில் கொடைக்கானல் நகரம்... என்ன நடக்கிறது?

கொடைக்கானலில் காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வதாகவும், அதற்கு உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

5 மரவள்ளிக் கிழங்கில் மாவு பூச்சித் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மரவள்ளிக் கிழங்கில் மாவு பூச்சித் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

6 பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை நிரப்பும் அதிசய பங்க்!

தெலங்கானாவில் பெட்ரோல் பங்க் ஒன்றில், பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை வாகனத்தில் நிரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 மக்களின் பிரதிநிதி நான் - சைக்கிளில் பயணித்த ராகுல்

நாட்டில் விலைவாசி உயர்வை கண்டிக்கும் விதமாக ராகுல் காந்தி சைக்கிளில் பயணம் செய்தார்.

8 பசுமையான மாநிலமாக புதுச்சேரியை மாற்ற முயற்சி - ரங்கசாமி

புதுச்சேரியை பசுமையான மாநிலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

9 இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியில் விபத்துக்குள்ளானது. ரஞ்சித் சாகர் அணை அருகே இந்த விபத்து நடைபெற்றதாகவும், சம்பவ இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பதக்கம் வெல்வதே தற்போதைய குறி - கேப்டன் மன்பிரீத் சிங்

அரையிறுதிப் போட்டியில் தோற்றது கவலை அளித்தாலும் பதக்கம் வெல்வதே தற்போதைய குறிக்கோள் என ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details