தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணிச் செய்தி சுருக்கம் top 10 news@ 5 PM - ஈடிவி பாரத்தின் 5 மணிச் செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணிச் செய்தி சுருக்கம்

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm

By

Published : Jul 14, 2021, 5:03 PM IST

1.ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17%ல் இருந்து 28%ஆக உயர்த்தி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

2.12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: மார்க் ரெடி, ரிசல்ட் எப்போ?

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

3.நீட் தேவையில்லை, மாநில அளவில் தேர்வு - ஏ.கே. ராஜன் குழு அறிக்கையில் தகவல்

நீட் தேர்வால் மருத்துவப்படிப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட ஏ.கே. ராஜன் குழு அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை எனவும், தேவைப்பட்டால் மாநில அளவில் தேர்வு நடத்திக்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

4.மடாதிபதியான 5 வயது சிறுவன்!

கர்நாடகாவில் 5 வயது சிறுவன் மடாதிபதியான சம்பவம் நடந்துள்ளது.


5.பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு- சீனர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 9 சீனர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

6.'கொங்கு நாட்டின் வருங்கால முதமைச்சரே!' - சர்ச்சையைக் கிளப்பும் பேனர்

கொங்கு நாட்டின் வருங்கால முதலமைச்சரே என பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அண்ணாமலையை வரவேற்க நாமக்கல் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

7.நடத்தையில் சந்தேகம்: மனைவி, மாமியாரை குத்திக் கொன்ற நபர்!

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு நள்ளிரவில் மனைவி, மாமியாரை குத்திக் கொன்றவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

8.அரசுக்கு அனைத்துவிதத்திலும் அறிக்கை உதவியாக இருக்கும் - ஏ.கே. ராஜன்

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அறிக்கையாகப் பல்வேறு தகவல்களுடன் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தெரிவித்துள்ளார்.


9.’100 விழுக்காடு அளவுக்கு மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ - நடிகர் சூரி வலியுறுத்தல்

பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் என அறிவித்து முதலமைச்சர் மரியாதை செய்துள்ளார் என்றும், 100 விழுக்காடு அளவுக்கு மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.


10.ஒலிம்பிக் பதக்க கனவு நிறைவேறும் - தன்ராஜ் பிள்ளை!

இந்திய ஹாக்கி வீரர்கள் உடலளவில் உறுதியாக உள்ளனர், பதக்கம் வெல்லும் கனவை நிறைவேற்றுவார்கள் என தன்ராஜ் பிள்ளை கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details