தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணிச் செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 PM - Top 10 News

ஈடிவி பாரத்தின் 5 மணிச் செய்திச் சுருக்கம்

5 மணிச் செய்தி சுருக்கம்
5 மணிச் செய்தி சுருக்கம்

By

Published : Jul 8, 2021, 5:10 PM IST

1. தென்மேற்குப் பருவமழை: வட மாநிலங்கள் முதல் தமிழ்நாடு வரை கனமழை எச்சரிக்கை

தென்மேற்குப் பருவமழை வட மாநிலங்களில் ஜூலை 10ஆம் தேதியிலிருந்து தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


2.'அனைவரும் தங்கம் வெல்வதே கனவு' - விளையாட்டுத் துறை அமைச்சர்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர்களுக்காக வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

3.'மத்திய அரசுக்கு' பதிலாக 'ஒன்றிய அரசு' எனப் புத்தகங்களில் அச்சிடப்படும் - லியோனி

அடுத்த பருவத்தில் 'மத்திய அரசு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஒன்றிய அரசு' என்று புத்தகங்களில் அச்சிடப்படும் எனத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

4.தி.மலையில் முதுகுத்தண்டு மருத்துவமனையை முதலமைச்சர் திறந்துவைக்க கோரிக்கை

திருவண்ணாமலையில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் முதுகுத்தண்டு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்க வேண்டுமென ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

5.சொத்துக்குவிப்பு: சுற்றுச்சூழல் துறை முன்னாள் கண்காணிப்பாளர், அவரது மனைவி மீது வழக்கு

பல கோடி ரூபாய் சொத்துகளை முறைகேடாகக் குவித்த சுற்றுச்சூழல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் பாண்டியன், அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


6.புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபம் திறக்க நடவடிக்கை - ரங்கசாமி

புதுச்சேரியில் 23 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவரும் காமராஜர் மணிமண்டபத்தை, அவரது பிறந்தநாளன்று திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

7.டோக்கியோவில் அவசரநிலை ஊரடங்கு: பார்வையாளரின்றி ஒலிம்பிக் 2020?

ஜப்பானில் கோவிட்-19 நான்காம் அலை தீவிரமடைந்துள்ளதால் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை ஊரடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

8.ராணிப்பேட்டையில் உயிரிழந்தவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு

கணவன் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால், புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து, உடற்கூராய்வு செய்ய வேண்டும் என இளம்பெண் அளித்த புகாரின்பேரில், இன்று தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.


9.இளம்பெண்ணிற்கு மயக்க மருந்து தடவிய முகக்கவசம்: காவல் துறை விசாரணை

இளம்பெண்ணிற்கு மயக்க மருந்து தடவிய முகக்கவசம் கொடுத்த பெண்ணை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

10.ஆர்யாவின் 'சார்பட்டா' ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு!

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சார்பட்டா' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details