தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம் - முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்..

Top 10 News @ 5 PM
ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jun 28, 2021, 5:29 PM IST

கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

தென்மாவட்டங்களில் கோயில்களை திறக்க வேண்டும் - செல்லூர் ராஜூ

தென்மாவட்டங்களில் கோயில்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

+2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது - பொன்முடி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, + 2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

'வேட்டியில் மணமகள்.. வெட்கத்தில் மணமகன்..' - ஆந்திராவில் வினோத திருமணம்

மணமகன் பெண் உடையும், மணமகள் ஆண் உடையும் அணிந்துக் கொண்டு வினோதமான முறையில் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

'ஒரு மணி நேரத்தில் 8747 முறை ஸ்கிப்பிங்' - ராஜபாளையம் இளைஞரின் லிம்கா சாதனை

ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரத்து 747 முறை ஸ்கிப்பிங் செய்து ராஜபாளையம் இளைஞர் ஐயப்பன் லிம்கா சாதனை படைத்துள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துவருகின்றனர்.

இலங்கைக்கு புறப்பட்டது தவான் - டிராவிட் இந்திய இளம் படை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இன்று (ஜுன் 28) மும்பையிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டது.

ரஜினி எப்படி அமெரிக்கா சென்றார்: சர்ச்சையை கிளப்பும் கஸ்தூரி

ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சரமாரி கேள்விகளை எழுப்பி வருகிறார்.

யுவன் இசையில் மீண்டும் பாடல் பாடிய சிம்பு!

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள ஆல்பத்திற்கு நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details