தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 5 PM - அண்மைச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ...

மாலை 5 மணி செய்தி சுருக்கம்
மாலை 5 மணி செய்தி சுருக்கம்

By

Published : Jun 18, 2021, 5:09 PM IST

சபர்மதி ஆற்றில் கோவிட் வைரஸ் மாதிரிகள்!

சபர்மதி ஆற்றில் கோவிட் வைரஸ் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விஞ்ஞானி ஒருவர் பேட்டியளித்தார்.

பிரபல தாபா உரிமையாளர் தற்கொலை முயற்சி!

பிரபல தாபா உணவக உரிமையாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்த்துகீசிய கொள்கலன் கப்பலில் 10 கிலோ லிட்டர்எண்ணெய் கசிவு!

ஹால்டியாவுக்குச் செல்லும் போர்த்துகீசிய கொள்கலன் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதையடுத்து, இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது

’திமுக ஆட்சியில் மீண்டும் தொடரும் மின் வெட்டு’ - கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

திருப்பத்தூர்: அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழ்நாடு மாறியிருந்த நிலையில், தற்போது மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி சாடியுள்ளார்.

கரோனா - பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத்தொகை செலுத்தப்படும்!

தூத்துக்குடி: கரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புத்தொகை செலுத்தப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

காதலை நிராகரித்ததால் சோகம்: 22 கத்திக் குத்து வாங்கிய பெண்!

மலப்புரத்தில் காதலை நிராகரித்த பெண்னை இளைஞர் ஒருவர் 22 முறை கத்தியால் குத்தியதாக உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சச்சி நினைவு நாள்: மனமுடைந்த பிருத்விராஜ்

சச்சி, நடிகர் பிருத்விராஜின் நெருங்கிய நண்பர் ஆவார். சாக்லேட், ராபின்ஹூட், டிரைவிங் லைசன்ஸ் என இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்தியப் படை தாக்குதலால் 'ரிவர்ஸ் கியர்' போட்ட பாகிஸ்தான் ட்ரோன்

குர்தாஸ்பூரில் இந்திய எல்லையைத் தாண்டி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் மீது இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

போலி ஆக்ஸி மீட்டர் செயலிகள் மூலம் திருடப்படும் வங்கிக் கணக்கு விவரங்கள்

போலி ஆக்ஸிமீட்டர் செயலிகள் மூலம் பயனர்களின் ஓடிபி, வங்கி விவரங்கள், முக்கியத் தரவுகள், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் திருடப்படுவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கேவண்டும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details