தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 5 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ...

மாலை 5 மணி செய்தி சுருக்கம்
மாலை 5 மணி செய்தி சுருக்கம்

By

Published : Jun 16, 2021, 5:03 PM IST

1 ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

ராமநாதபுரம்: சென்ட்ரல், மதுரை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

2 பயிற்சியாளர் கெபிராஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது!

பயிற்சியாளர் கெபிராஜ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிய வாய்ப்புள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 பூண்டி அணையை தேடி பாய்ந்தோடி வரும் கிருஷ்ணா நதிநீர்!

ஜூன் 14ஆம் தேதி ஆந்திராவின் நீர்ப்பாசன அலுவலர்கள் கண்டலேறு அணையிலிருந்து 2100 கன அடி நீரைத் திறந்து விட்டனர். இது இன்று மாலைக்குள் பூண்டி அணையை வந்தடையும் என பொதுப் பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

4 சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

5 தர்மபுரியில் கடந்த 2 நாள்களில் ரூ6.50 கோடிக்கு மதுபானம் விற்பனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் அரசு மதுபான கடைகளில் ரூ 6.50 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

6 சசிகலாவிற்குப் புதுச்சேரி அதிமுக கண்டனம்!

புதுச்சேரி அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7 லோனி சம்பவம்: ட்விட்டர் மீது உ.பி. காவல் துறை வழக்குப்பதிவு

லோனி சம்பவம் தொடர்பாக ட்விட்டர் இந்தியா உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு எதிராக காஸியாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

8 புதுச்சேரி மாநில புதிய சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்பு!

புதுச்சேரி மாநிலத்தின் புதிய சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஏம்பலம் செல்வம் இன்று பதவியேற்றார்.

9 சிவசங்கர் பாபா கைது

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

10 ஊரடங்கில் தளர்வு - தாஜ்மஹால் மீண்டும் திறப்பு!

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடந்து தாஜ்மஹால் இன்று(ஜூன்.16) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details