தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - பிரதான செய்திகள்

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm

Top 10 news @ 5 pm
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm

By

Published : Mar 12, 2021, 5:36 PM IST

மே 1ஆம் தேதிக்குள் 18 வயதை தாண்டியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்

வரும் மே 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை கவனமுடன் பெறுங்கள்- உயர் நீதிமன்றம் அறிவுரை

வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெறும்போது விழிப்புடன் இருக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் களத்தில் கமல்; கோவை தெற்குத் தொகுதியில் போட்டி!

கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திமுக கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

தி.நகரில் பழ.கருப்பையா; மயிலாப்பூரில் ஸ்ரீப்ரியா! - கமல்

கொங்கு ஊழல் கோட்டையாகிப் போனதால் அதனை மாற்றவே, கோவை தெற்கில் போட்டியிடவுள்ளதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை சுமார் ரூ. 47.6 கோடி பறிமுதல் - சத்யபிரதா சாகு தகவல்

தமிழ்நாடு முழுவதும் இதுவரை பரிசு பொருட்கள், பணம் என சுமார் ரூ. 47.6 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தொகுதிக்கு செய்வது சட்ட விரோதமாகாது! - உயர் நீதிமன்றம்

அமைச்சர்கள் தங்கள் தொகுதிக்கு வசதிகள் செய்து கொடுப்பதை சட்ட விரோதமாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட கமல் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது யார்? இந்தியா vs இங்கிலாந்து

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

சியான் 60இல் இணைந்த பாபி சிம்ஹா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தில் அசால்ட்டாக நடித்து விருது பெற்ற நடிகர் இணைந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details