தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ..

By

Published : Feb 15, 2021, 5:00 PM IST

Top 10 News @ 5 PM
Top 10 News @ 5 PM

49.9 விழுக்காடு இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி மறைமுகமாக நிர்பந்திக்கிறதா மத்திய அரசு? நீதிபதிகள் கேள்வி

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறதா? என மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியிருக்க வீடு வேண்டும்! - மனு அளித்த முன்னாள் எம்எல்ஏ!

மதுரை: குடியிருக்க இலவச வீடு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நன்மாறன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார்.

பொது மக்களிடம் கொள்ளை - எரிவாயு சிலிண்டர் உயர்வு குறித்து ராகுல் காந்தி

டெல்லி: இரண்டு பேரின் வளர்ச்சிக்காக பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்படுவதாக ராகுல் காந்தி எரிவாயு சிலிண்டர் உயர்வு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

ஆசைக்கு இணங்க மறுப்பதால் காவல் உயரதிகாரி பழிவாங்குவதாக பெண் ஆய்வாளர் புகார்

திருநெல்வேலி: ஆசைக்கு இணங்க மறுப்பதால் பழிவாங்குவதாகவும், தானும் குழந்தைகளும் உயிரிழந்தால் அதற்கு காரணம் நெல்லை மாவட்ட காவல் உயர் அதிகாரிதான் எனவும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் பரபரப்பு புகாரளித்துள்ளார்.

சாதி, மத, பேதம் எனக்கில்லை- யுவராஜ் சிங் மன்னிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சாஹல் மீது சாதி ரீதியிலான விமர்சனம் செய்ததாக யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சாதி, மதம், இனம், நிறம் குறித்த பேதம் எனக்கில்லை என்று யுவராஜ் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.

புதுச்சேரிக்கு ராகுல் காந்தி வருகை: மைதான பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர்!

புதுச்சேரிக்கு 17ஆம் தேதி ராகுல் காந்தி வருகை என்றும் மீனவர் சந்திப்பு மாணவர்களுடன் கலந்துரையாடல் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதால் முதலமைச்சர் நாராயணசாமி மைதான பணிகளை ஆய்வு செய்தார்.

தெலங்கானா கார் விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஹைதராபாத்: எஸ்ஆர்எஸ்பி கால்வாயில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வலிமை பட அப்டேட் கேட்டு ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் வருத்தம் அளிக்கின்றன- நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை

வலிமை படத்தின் அப்டேட் உரிய நேரத்தில் வெளியிடப்படும், பொதுவெளியில் ரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும்; ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் செயல்கள் வருத்தம் அளிக்கின்றன என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு

ஜகார்த்தா: ஜாவா தீவில் பெய்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

2ஆவது டெஸ்ட்: அஸ்வின் அபார சதம், இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 482 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ABOUT THE AUTHOR

...view details