தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்தி சுருக்கம்...

Top 10 News @ 5 PM
Top 10 News @ 5 PM

By

Published : Feb 3, 2021, 5:11 PM IST

வன்முறை தூண்டியதாக தேச துரோக வழக்கு: உச்ச நீதிமன்றம் சென்ற சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய்!

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை தூண்டியதாக சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கேரள தங்கக் கடத்தல்; எம். சிவசங்கருக்கு ஜாமீன்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலர் எம். சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தறியில் அமர்ந்து நெசவாளர்களின் குறைகளை கேட்ட உதயநிதி ஸ்டாலின்!

காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பிள்ளையார்பாளையம் பகுதியில் நெசவாளர் ஒருவரது வீட்டில் நெசவு தறியில் அமர்ந்தவாரே நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பொது பாதுகாப்பு சட்டம்: காஷ்மீரில் கைதான 430 பேர் விடுவிப்பு!

காஷ்மீர்: பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 613 நபர்களில் 430 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இது அழகல்ல! - நீதிபதி கண்டனம்!

சென்னை: எம்.டெக். படிப்பில் இரு பாடப்பிரிவுகளை ரத்து செய்தது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசியால் தூய்மை பணியாளர் உயிரிழப்பு? மறுஉடற்கூராய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

மதுரை: கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் தூய்மை பணியாளரின் உடலை, மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஃபைசர் தடுப்பூசிக்கு ஓகே சொன்ன நியூசிலாந்து

வெலிங்டன்: கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தாக ஃபைசர் தடுப்பூசி பயன்பாடுத்துவதற்கு தற்காலிகமாக நியூசிலாந்து அரசு ஓப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் இளம் பெண் விமானி ஆயிஷா அசிஸ்!

இந்தியாவின் இளம் பெண் விமானி என்ற பெருமையை 25 வயதான ஜம்மு காஷ்மீரின் ஆயிஷா அசிஸ் பெற்றுள்ளார்.

' நடிகர் குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு' - டெல்லி போலீஸ் அறிவிப்பு

டெல்லி: பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது.

வீட்டுமனை பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய தாசில்தார், வருவாய் ஆய்வாளர் கைது!

ஈரோடு: வீட்டுமனை பட்டா வழங்க அதிகளவில் லஞ்சம் கேட்பதாக வந்த புகாரையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், கையூட்டுப் பெற்ற தனி வட்டாட்சியர், வருவாய் அலுவலர் ஆகிய இருவரை கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details