தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 5 pm
Top 10 news @ 5 pm

By

Published : Sep 26, 2020, 5:59 PM IST

  • உயிரோடு இருக்கும் எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு!

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல் தெரிவிப்பதற்குப் பதிலாக அமைச்சர் செல்லூர் ராஜு உயிருடன் இருக்கும் எம்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • நிலுவையில் 400-க்கும் மேற்பட்ட அரசியல் சாசன வழக்குகள்

அரசியல் சாசனம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

  • பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பில்லை

பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை.

  • எஸ்.பி.பி.யின் உடல் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல் 78 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  • காதலில் தொடங்கிய கொலைவெறி: ஐந்து கொலை... அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்

நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் 12 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசி தாய் , மகளை கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

  • புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கரோனா - சென்னையில் அனுமதி!

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • 'மக்கள் அனைவரும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் பயன்பெறுவர்' - அமைச்சர் காமராஜ்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்பெறுவார்கள் என திருவாரூரில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி. உருவப்படத்திற்கு ஜெய்பூரில் அஞ்சலி செலுத்திய விஜய்சேதுபதி!

'என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை' - கே.ஜே. யேசுதாஸ்!

என்னுடைய சகோதரரை கடைசி நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் மிகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

  • முதல் வெற்றியை பறிப்பது யார்? - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எட்டாவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(எஸ்.ஆர்.எச்) அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ABOUT THE AUTHOR

...view details