தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 5 pm
Top 10 news @ 5 pm

By

Published : Sep 25, 2020, 4:54 PM IST

  • எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார்: மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இதனை அவர் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • 'பல ஆண்டுகளாக என் குரலாக இருந்தீர்கள்...' எஸ்பிபி மறைவுக்கு ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல்

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இனிமையான, கம்பீரமான குரல் நூறு ஆண்டுகள் வரையும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

  • எஸ்.பி.பி. மரணம்: கண்ணீர் கவிதாஞ்சலி செலுத்திய கவிஞர் தாமரை!

சென்னை : இனி பொழியும் அந்திமழையின் ஒவ்வொரு துளியிலும் உன்முகம்தான்; உன் குரல்தான் என மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு கவிஞர் தாமரை கவிதாஞ்சலி செலுத்தியுள்ளார்.

  • விவசாயிகளை அடிமைகளாக்கும் வேளாண் மசோதா - மத்திய அரசை சாடிய பிரியங்கா

டெல்லி: வேளாண் மசோதா விவசாயிகளை அடிமைகளாக்குவதற்கும், விவசாயிகள் தங்கள் வயல்களில் தொழிலாளர்களாக மாற்றும் செயலாகும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

  • இதுவரை பார்த்திராத சூழ்நிலையை இந்தியாவும் சீனாவும் சந்தித்து வருகிறது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

டெல்லி: இந்தியாவும் சீனாவும் இதுவரை பார்த்திராத இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து வருகின்றன என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

  • வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் துரைக்கண்ணு!

சென்னை: வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, தேர்தலையொட்டியே எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறது என வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • நாடாளுமன்றத் தேர்தலின்போது பணம் பறிமுதல்செய்த விவகாரம்: 3 பேரிடம் விசாரணை

வேலூர்: நாடாளுமன்றத் தேர்தலின்போது 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்த விவகாரத்தில் வங்கி மேலாளர் உள்பட மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

  • சாய்பாபா கோயில் பூட்டை உடைத்து திருட்டு

சென்னை: கோயில் அலுவலகப் பூட்டை உடைத்து ஆறு லட்ச ரூபாய், மடிக்கணினி கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

  • ஈரோட்டில் மண்ணெண்ணை பதுக்கல்: ரேஷன் கடை பெண் ஊழியர் சஸ்பெண்ட்!

ஈரோடு: மண்ணெண்ணை பதுக்கியதாக நியாய விலைக் கடையின் பெண் ஊழியரை இடைநீக்கம் செய்து சத்தியமங்கலம் கூட்டுறவு சங்க தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

  • இரண்டாவது வெற்றிக்கு மல்லுக்கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஏழாவது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ABOUT THE AUTHOR

...view details