தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm

By

Published : Jul 9, 2020, 5:17 PM IST

'கரோனாவுக்குப் பிறகான உலகை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றும்' - பிரதமர் மோடி

டெல்லி: சமூக, பொருளாதார சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததற்கு வரலாற்றுச் சான்று உள்ளதால், கரோனாவுக்குப் பிறகான உலகத்தை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'தனியார் நிறுவனம் வருவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்' - ரயில்வே வாரியத் தலைவர்!

டெல்லி: ரயில்வேயில் தனியார் நிறுவனம் வருவதால், வேலையிழப்பு ஏற்படுவதற்குப் பதிலாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும், புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் என்றும் ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

அழிந்து வரும் சிறு, குறு நிறுவனங்கள் - ராகுல் காந்தி

டெல்லி: சிறு குறு நிறுவனங்கள் அழிந்துவரும் நிலையில், பெரு நிறுவனங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

'அவரால் வாழ்ந்தவர்கள் பலர்' - இயக்குநர் கே.பாலசந்தருக்கு ரஜினிகாந்த் புகழாரம்!

சென்னை: இயக்குநர் கே. பாலசந்தரின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் காணொலி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் 50 ஆயிரத்தை நெருங்கும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!

சென்னை: கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

காரைக்காலில் ஜோதிடர் மூலம் 13 நபர்களுக்குக் கரோனா - கிரண் பேடி தகவல்!

புதுச்சேரி: காரைக்காலில் கைரேகை ஜோதிடர் மூலம் 13 நபர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

'வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பிழைக்காது' - நீதிபதிகள் வேதனை

சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பிழைக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

'கல்வியில் சமரசம் செய்தால் எதிர்காலம் கேள்விக்குறி' - டாப்ஸி

மும்பை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து தேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டதற்கு நடிகை டாப்ஸி பானு கண்டனம் தெரிவித்துள்ளார்.

'ஆசிய கோப்பை ரத்து பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை' - பிசிபி

2020ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் ரத்துசெய்யப்பட்டதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தங்களுக்கு வரவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் கரோனா பாதிப்பாளர்களைக் கண்டறியும் போலீஸ் நாய் - களமிறக்கிய ஐக்கிய அரபு நாடுகள்!

துபாய்: பொது இடங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாகக் கண்டறிய போலீஸ் நாய்களை ஐக்கிய அரபு நாடுகள் களமிறக்கியுள்ளன‌.

ABOUT THE AUTHOR

...view details