தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM - 5 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ..

Top 10 News @ 5 PM
Top 10 News @ 5 PM

By

Published : Feb 13, 2021, 4:55 PM IST

பட்டாசு ஆலை விபத்து: நிவாரண தொகையை உயர்த்த எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் வலியுறுத்தல்!

டெல்லி: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர், படுகாயமடைந்தவர்களுக்கு பிரதமர் அறிவித்துள்ள நிவாரண தொகையை உயர்த்த வேண்டும் என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

'அரசு பணத்தில் பரப்புரை மேற்கொள்ளும் முதலமைச்சர்'

நாமக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் அரசு நிதியைக் கொண்டு தேர்தல் பரப்புரை செய்து வருவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஓய்வுபெற்ற டிஜிபி மகனை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை: ஓய்வுபெற்ற டிஜிபி மகனை தாக்கிய 2 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'பணிகள் நிறைவடையாத மெட்ரோ சேவை; அரசியலுக்காக அவசரம் காட்டும் அரசு’ - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

சென்னை: பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை நாளை திறக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வண்ணாரப்பேட்டை-விம்கோ மெட்ரோ ரயில்! நாளை தொடங்கி வைக்கிறார் மோடி!

சென்னை: ஒருநாள் பயணமாக நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ திட்டம், ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மதுரையை ஆண்ட முதல் நாயக்க மன்னரின் கல்வெட்டு கண்டெடுப்பு

மதுரையை ஆட்சி செய்த முதல் நாயக்க மன்னரான விஸ்வநாத நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னர் திருமலை நாயக்கர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெலிங்டன் கண்டோன்மென்ட்டில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்!

நீலகிரி: குன்னுார் வெலிங்டன் கண்டோன்மென்ட்டில் ரூ.53 கோடி மதிப்பீட்டிலான, பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.

பெங்களூரு கலவர வழக்கில் முன்னாள் மேயருக்கு பிணை!

பெங்களூரு கலவர வழக்கில் முன்னாள் மேயருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

திமுகவுடன் கூட்டணி; சீட்டு ரொம்ப குறைவு தான் - தொண்டர்களுக்கு ஆறுதல் கூறிய வைகோ!

திருநெல்வேலி: திமுக தலைமையில் மதிமுக போட்டியிடும் என்றும் கூட்டணியில் சீட் குறைவாக கூட கிடைக்கலாம் அதற்காக வருத்தப்பட கூடாது என்றும் தொண்டர்களுக்கு வைகோ ஆறுதல் தெரிவித்துள்ளார்

ஹரியானாவில் துப்பாக்கிச் சூடு; பெண் மல்யுத்த வீராங்கனைகள் உள்பட ஐவர் உயிரிழப்பு!

ரோஹ்தக்: மல்யுத்த பயிற்சிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. இதில் ஐவர் உயிரிழந்தனர். குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட இருவருக்கு மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details