தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top  10 news @ 5 pm
Top 10 news @ 5 pm

By

Published : Jun 29, 2020, 4:59 PM IST

சட்டத்தை மதிக்காமல் தூத்துக்குடி சென்றுள்ளார் உதயநிதி - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மதிக்காமல், அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் தூத்துக்குடி சென்றுள்ளார் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை அரசியல் செய்கிறார்- அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கணினி முன்னால் அமர்ந்துகொண்டு அறிக்கை அரசியல் செய்துவருகிறார் என்று அமைச்சர் பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.

‘வெளிநாட்டு விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ - உயர் நீதிமன்றம்

சென்னை : வெளிநாட்டு விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

'கரோனா மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களுக்கு தகுதியுள்ளது' - தமிழ்நாடு அரசு

சென்னை : கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களுக்கு தகுதி உள்ளது என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

அமைச்சர் வேலுமணி தொடர்பான வழக்கில் திமுக பிரமுகர்கள் 43 பேருக்கு ஜாமீன்

சென்னை : அமைச்சர் வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்ட திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 43 பேருக்கு முன் ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரங்கை தூக்கில் தொங்கவிட்டு சித்ரவதைசெய்து கொன்ற மூவர் கைது

ஹைதராபாத்: கம்மம் மாவட்டத்தில் குரங்கு ஒன்றை தூக்கிலிட்டு சித்ரவதை செய்து கொன்ற இளைஞர்கள் மூவரை வனத் துறையினர் கைதுசெய்தனர்.

இந்தியை நிராகரிக்கும் உத்தரப்பிரதேச மாணவர்கள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமார் ஏழு லட்சம் பேர் இந்தி மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.

'கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்' - சாத்தன்குளம் விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் ட்வீட்

சென்னை : சாத்தன்குளம் விவகாரம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எஃப்ஏ கோப்பை: அரையிறுதி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கால்பந்து தொடரான எஃப்ஏ கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான அட்டவணையை எஃப்ஏ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஐசிசி தலைவர் தேர்தல் ரேஸில் குதித்த கேமரூன்

கிங்ஸ்டன்: ஐசிசி தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் டேவ் கேமரூன் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details