தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்கு மணி செய்திகள் Top 10 news @4pm - நான்கு மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் நான்கு மணி செய்திச் சுருக்கத்தைக் காண்க.!

Top 10 news @4pm
Top 10 news @4pm

By

Published : May 7, 2020, 3:59 PM IST

  • விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?

விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை தென் கொரியா எல்ஜி நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

  • 'கரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புகிறார்கள் என்ற கருத்தில் உண்மையில்லை'

கரோனா வைரஸ் நோயை இஸ்லாமியர்கள் பரப்புகிறார்கள் என்பதில் உண்மையில்லை, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகி தத்தாத்ரேயா ஹோசபள்ளி தெரிவித்துள்ளார்.

  • முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலருக்கு கரோனா!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 'விஷவாயு விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்'

விஷவாயு விபத்து குறித்த செய்தி கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  • அமெரிக்காவில் ஒரே மாதத்தில் 2 கோடி பேர் வேலையிழப்பு!

கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் தங்களின் வேலைகளை இழந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

  • கரோனா தொற்றால் பெண்மணி ஒருவர் உயிரிழப்பு

கரோனா தொற்று பாதிப்பால் 46 வயது பெண்மணி ஒருவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்

  • வரிசையில் நின்ற பெண்ணுக்கு வழிவிட்ட குடிமகன்கள்!

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் மது வாங்க வந்திருந்த பெண்ணிற்கு குடிமகன்கள் முன்னுரிமை அளித்து முதலில் வாங்க வழிவிட்டனர்.

  • மது பாட்டில்கள் கடத்திய தனியார் தொலைக்காட்சி எடிட்டர்!

செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்திய தனியார் தொலைக்காட்சி எடிட்டர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • நாகர்கோவில் காசிக்கு நெருக்கமான நண்பர் கைது!

பெண் மருத்துவரை ஏமாற்றி பணம் பறித்த காசிக்கு உதவிய நண்பரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

  • 'மன்னன் முட்டாளாக இருந்தால் நாடு உருப்படாது'

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா வைரஸ் குறித்தும், மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேள்வி கேட்டு, இயக்குநர் அமீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details