தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM - chennai district

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச்சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS
TOP 10 NEWS

By

Published : Oct 2, 2021, 3:12 PM IST

'நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி'

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

ஒன்றிய அரசின் நிதியை நேரடியாகப் பெற... அண்ணாமலை கேட்பது அது ஒன்றைத்தான்!

மரக்காணம் ஒன்றியத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களிலும் ஒன்றிய அரசின் 80 விழுக்காடு நிதி பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டினார்.

ஒரேநாளில் 24,354 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 24 ஆயிரத்து 354 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

'As I am attending Valagappu' - பிடிஆரை கலாய்த்த முன்னாள் 'கலகல' அமைச்சர்!

'As I am attending Valagappu' என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளார்.

வீரபாண்டி ராஜாவின் இறுதிச்சடங்கு: சேலம் செல்லும் ஸ்டாலின்

வீரபாண்டி ராஜான் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலில் சேலம் செல்கிறார்.

வந்தான், சுட்டான், போனான், ரிபீட்- வெளியான மாநாடு ட்ரெய்லர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

காந்தியடிகள், காமராஜர் சிலைகளுக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்த்தூவி மரியாதை

புதுச்சேரியில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி கடற்கரைச் சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கும், காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கும் அம்மாநில துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொழிலதிபரை கடத்த முயன்ற வழக்கு - ஒருவர் கைது!

சென்னையில் கட்டுமான தொழில் செய்து வரும் தொழிலதிபரை கடத்த முயன்ற வழக்கில் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆட்கொல்லி புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டாம் - வானதி சீனிவாசன்

நீலகிரியில் ஆட்கொல்லி புலியைச் சுட்டுக் கொல்வதைவிட்டு, அதனை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வானதி சீனிவாசன் கேடுக்கொண்டுள்ளார்.

மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details