தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM - chennai news

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்தி
பிற்பகல் 3 மணி செய்தி

By

Published : Sep 27, 2021, 3:02 PM IST

தமிழ்நாட்டில் போயிங் விமான பாகங்கள் தயாரிப்பு- முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய விமான பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்பட்டது.

பாரத் பந்த் காரணமாக தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

நாடு முழுவதும் விவசாயிகள் அறிவித்துள்ள பந்த் காரணமாக ஹரியானா மாநிலம் சோனிபட்டில் தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டு நலனுக்கு அவசியம் - நிதிஷ் குமார்

சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை நிறைவேற்றினால் நாட்டின் சமூகப் பொருளாதார நிலை சிறந்த பாதைக்கு நிச்சயம் செல்லும் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

'செவிலியரைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை'

'தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியரை எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே வைத்திருப்பது சரியல்ல. கரோனா பேரிடரின்போது நம்மைக் காத்து நின்ற செவிலியரை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதுதான் அறம்' என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கைவைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்.

ஸ்டாலின் வீட்டின் முன் ஒருவர் தீக்குளிப்பு

சென்னையிலுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தார்.

3ஆவது முறையாக பிரபல நடிகருடன் இணையும் விஷால்

நடிகர் விஷாலின் 32ஆவது திரைப்படத்தில் நடிகர் பிரபு இணைந்துள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நீட் தேர்வால் என் வீட்டிலும் தற்கொலை நடந்திருக்கிறது - சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி நீட் தேர்வு அச்சம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் மனநிலை குறித்துப் பேசியுள்ளார்.

கோவிட்-19: இந்தியாவில் புதிதாக 26,041 பேருக்கு கரோனா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 41 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரபாஸின் ஆதிபூருஷ் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'ஆதிபூருஷ்' படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

திமுக சொன்னதை செய்யும் - முதலமைச்சர் ஸ்டாலின்

தேர்தல் அறிக்கையில் கொடுத்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details