தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

3 மணி செய்தி
3 மணி செய்தி

By

Published : Apr 7, 2021, 3:17 PM IST

1.அரியர் தேர்வு ரத்து உத்தரவை ஏற்க இயலாது- சென்னை உயர் நீதிமன்றம்

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2.நன்றிக்குரியோரே! நல் உள்ளங்களே! நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது! - மு.க.ஸ்டாலின்

இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், அராஜகத்தையும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் துணிச்சலுடன் எதிர்கொண்டு இந்தத் தேர்தல் களத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பது, ஜனநாயகத்தில் நம் கூட்டணிக் கட்சியினர் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பொருத்தப்பாடாக இருக்கிறது.

3.தேர்தல் 2021: வாக்குப்பதிவில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!

தமிழ்நாடு தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காட்டின் கவனிக்க வேண்டிய சில அம்சங்களைக் காணலாம்.

4.செக் மோசடி வழக்கு: ராதிகாவுக்கு பிடிவாரண்ட்; சரத்குமார் எஸ்கேப்!

ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் பணத்தை திருப்பி தருமாறு கோரிய நிலையில், மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான 2 காசோலையும்,சரத்குமார் சார்பில் தனிப்பட்ட முறையில் 10 லட்சம் மதிப்புள்ள 5 காசோலையும் வழங்கப்பட்டது.

5.தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கு புதிய துணைவேந்தர் நியமனம்

தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் கே.என். செல்வகுமாரை நியமித்து, பல்கலைக்கழக வேந்தர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

6.கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

பெங்களூரு: 6ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்காததைக் கண்டித்து கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.

7. தேர்தல் நாளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பூத் ஏஜெண்ட் கொலை!

கேரளா: கண்ணூர் மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த 21 வயது பூத் ஏஜெண்ட் ஒருவர் நேற்று கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

8.ஓடிடி தளத்தில் வெளியாகும் அன்பிற்கினியாள்!

சென்னை: திரையரங்குகளில் வெளியான ’அன்பிற்கினியாள்’ திரைப்படம், மீண்டும் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

9.ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ ஆளுநர்

மும்பை: ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

10.என்னடா இது ஆர்சிபிக்கு வந்த சோதனை: டேனியல் சாம்ஸுக்கு கரோனா!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டையடுத்து இரண்டாவதாக டேனியல் சாம்ஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details