தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம் - vedha illa case

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

Top 10 news @ 3PM
Top 10 news @ 3PM

By

Published : Jan 28, 2021, 3:02 PM IST

வேதா இல்ல வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றப்பட்ட வேதா நிலைய கட்டடத்திற்குள் செல்ல அனுமதிக்காத தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

‘தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது’ - டிடிவி தினகரன்

அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்திருப்பதைக் கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் துப்பாக்கிச் சூடு: பெண் உள்பட இருவர் உயிரிழப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஆட்டோவில் சென்று வாக்கு கேட்போம், ஆட்டோ சின்னம் கேட்க மாட்டோம்! புதிய கட்சி தொடங்குகிறார் அர்ஜூனமூர்த்தி

சென்னை: புதிய கட்சி தொடங்கபோவதாக அர்ஜூனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதி நவீன சானிடைசர் கருவியை கண்டுபிடித்த ஐஐடி ஜோத்பூர்!

ஜோத்பூர்: உணவு பாக்கேட், புத்தகம் போன்ற பல பொருள்களை எளிதாக கிருமி நீக்கம் செய்யும் கருவியை, ஐஐடி ஜோத்பூர் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஓயாத சாதிக் கொடூரங்கள் - பட்டியலின இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்து கொடுமை!

புதுக்கோட்டை: பட்டியலின சாதி எனக்கூறி இரவு முழுவதும் அடித்து, வாயில் சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் புகாரளித்துள்ளார்.

நாமக்கல் முன்னாள் திமுக எம்எல்ஏ மறைவு!

நாமக்கல்: முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனிவேலன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானர்.

தைப்பூசம்: திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்

தூத்துக்குடி: தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் அலகு குத்தி, காவடி சுமந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இறைச்சிக் கழிவு ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!

நாமக்கல்: அலங்காந்தம் அருகே இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த பொதுமக்களால் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது.

காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் கிரிஷன் தேவ் சேத்தி காலமானார்

ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரும், அரசியல் நிர்ணைய சபையின் உறுப்பினருமான கிரிஷன் தேவ் சேத்தி காலமானார். அவருக்கு வயது 96.

ABOUT THE AUTHOR

...view details