தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Dec 17, 2020, 2:52 PM IST

தேனியில் அம்மா மினி கிளினிக்குகள்: துணை முதலமைச்சர் திறந்துவைப்பு

தேனியில் ஏழு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகளை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (டிச.17) திறந்துவைத்தார்.

மின்வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடம் தனியாரிடம் ஒப்படைப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டமாக, மின்வாரிய பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவருவது, அத்துறைப் பணியாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆவடியில் பைக் மீது வேன் மோதி விபத்து - பொறியாளர் உயிரிழப்பு!

சென்னை: ஆவடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பொறியாளர் உயிரிழந்தார்.

25 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் முருகன்!

வேலூர்: மனைவி நளினியுடன் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்காக சிறையில் 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று கைவிட்டார்.

கேரளா மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜெ.பி. நட்டா

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா நன்றி தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களை அகற்றக்கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அகற்ற சமந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை இன்று (டிசம்பர் 17) நடைபெறுகிறது.

விண்ணில் பாய பிஎஸ்எல்வி சி-50 தயார்

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் ஏவப்படவுள்ள பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்ததாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் துணை அதிபர்!

வாஷிங்டன்: மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவர்களது முன்னிலையில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளார்.

கரோனா தடுப்பூசியை முதல் நபராகப் பெறத் தயாராகும் இஸ்ரேல் பிரதமர்!

மக்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கரோனா தடுப்பூசியை முதல் நபராகப் பெற முடிவுசெய்துள்ளார்.

ஜாக்கிசானின் 'வான்கார்ட்' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஜாக்கிசான் நடிப்பில் உருவாகியுள்ள 'வான்கார்ட்' படத்தின் ட்ரெய்லரும் வெளியீட்டுத் தேதியும் தற்போது வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details