தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்...

மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Dec 12, 2020, 2:51 PM IST

ஒரே ஒரு சூப்பர்ஸ்டாருக்கு வாழ்த்துகள்...பிரபலங்கள் பெருமிதம்!

சென்னை: ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் சமூகவலைதளத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பல்லாவரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் ஆய்வு

செங்கல்பட்டு : பல்லாவரம் பகுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் முகாமை சிறப்பு தேர்தல் பார்வையாளர் அலுவலர் ஆய்வு செய்தார்.

'காங்கிரஸ் - திமுக இடையே கருத்து வேறுபாடு இல்லை' - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: காங்கிரஸ்- திமுக இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: கணக்கில் வராத பணம் பறிமுதல்!

விழுப்புரம்: பல்வேறு மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்காலில் இரண்டு கோவில்களில் உண்டியல் உடைப்பு!

புதுச்சேரி: காரைக்காலில் அடுத்தடுத்து இரண்டு கோயில்களின் உண்டியல்களை உடைத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையடித்த அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றிய இளைஞர்!

டெல்லி: பேஸ்புக் மூலம் சிறுமியை ஏமாற்றிய இளைஞர் டெல்லி பதர்பூர் எல்லை அருகே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

'நான் குடியரசு தலைவரான போதே, காங்., தலைமை அரசியல் கவனத்தை இழந்துவிட்டது' - பிரணாப் முகர்ஜி

தான் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலிருந்தே காங்கிரஸ் தலைமை அரசியல் ரீதியாக தனது கவனத்தை தவறவிட்டது என்றும், மன்மோகன் சிங் தனது கூட்டணி அரசை காப்பற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார் என்றும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது 'தி பிரெஸிடென்சியல் இயர்ஸ்' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

மருத்துவ உலகில் அமெரிக்கா பெரும் சாதனை படைத்துள்ளது- ட்ரம்ப்

கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை 9 மாதங்களுக்குள்ளாகவே கண்டறிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து அமெரிக்கா மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

'தளபதி' ரஜினி கெட்டப்பில் 'ஸ்டார்' ஹரிஷ் கல்யாண் - வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு 'ஸ்டார்' என பெயரிடப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details