தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்..

மாலை 3 மணி செய்திச் சுருக்கம்
மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Dec 9, 2020, 3:26 PM IST

கரோனாவால் பாதிப்புக்குள்ளானவர்களின் வீட்டின் வெளியே போஸ்டர் ஒட்ட தேவையில்லை - உச்ச நீதிமன்றம்

டெல்லி: கரோனா பாதிப்புக்குள்ளானவர்களை அடையாளம் காணும் வகையிலான போஸ்டர்களை அவர்களின் வீட்டின் வெளியே இனி ஒட்ட வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

’அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்குவிப்போம்’ - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மனிதர்களுக்குள் அமைதி, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சோனியாவிற்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வேலூரில் அடுத்தடுத்து மூன்று கொலை: 7 பேரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை

வேலூர்: அடுத்ததடுத்து மூவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

டெல்லியில் மிதமான கட்டத்திற்கு மாறிய காற்று மாசு

டெல்லியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு காற்றின் தரம் மிதமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களைப் பார்வையிட விரைந்த வெளிநாட்டுத் தூதர்கள்

ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்கப்படும் நிறுவனங்களை ப்பார்வையிட 64 வெளிநாட்டுத் தூதர்கள் விரைந்துள்ளனர்.

காதலுக்கு எதற்கு வயது? இளம் இணையருக்கு காதல் திருமணம் செய்துவைத்த காவலர்கள்

ராய்ப்பூர்: பெற்றோர் எதிர்ப்பால் தடைப்பட்ட காதல் திருமணத்தை காவல் துறையினர் தலைமையேற்று நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸியை தோற்கடித்த ரொனால்டோ

பார்சிலோனா: UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியை 3-0 என்ற கணக்கில் யுவண்டஸ் அணி வீழ்த்தியது.

தனுஷின் 'கர்ணன்' படப்பிடிப்பு நிறைவு!

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'கர்ணன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை

சென்னை: மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை என சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details