தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-3pm
top-10-news-at-3pm

By

Published : Jul 7, 2020, 2:59 PM IST

'6 ஆண்டுகளில் 9 பெண்கள்' - சீரியல் கில்லருக்கு தூக்கு!

கொல்கத்தா: ஆறு ஆண்டுகளில் ஒன்பது பெண்களைக் கொலைசெய்த தொடர் கொலைகாரனுக்கு மேற்கு வங்க நீதிமன்றம் தூக்குத் தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அதிகரிக்கும் பதற்றம் : லடாக் எல்லையில் தீவிர ரோந்துப் பணியில் இந்திய போர் விமானங்கள்

டெல்லி : இந்தோ சீனா எல்லையில் இந்திய விமானப் படை விமானங்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருவதாக பாதுகாப்புத் துறை உயர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இறுதிச்சடங்கு செய்ய முன்வராத உறவினர்கள்: கணவரின் சடலத்துடன் ஒரு நாளைக் கழித்த மனைவி!

பெங்களூரு: கரோனா அச்சத்தின் காரணமாக உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்கு செய்ய முன்வராததால், உயிரிழந்த கணவரின் உடலுடன் மனைவி காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநில முதலமைச்சருக்கு கரோனா!

பிகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமாருக்கு கரோனா நோய்க் கிருமி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

'ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது ஏன்?' - ராகுல் காந்தி

டெல்லி: 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது ஏன் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்து வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சென்னை: பல்கலைக்கழகம் இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் பதவி விலகினால், நான் அரசியலை விட்டு விலகத் தயார் - மல்லாடி கிருஷ்ணாராவ்!

புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பதவியை விட்டு விலகினால் நான் அரசியலை விட்டே விலகத் தயார் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

ஆக்சன் பட இயக்குநருடன் கைகோத்த ஆஸ்கர் நாயகன்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் நாயகன் பிராட் பிட் இசக்கா கொட்டாரோ எழுதிய ஜப்பானிய நாவலான மரிய பீட்டிலை தழுவி எடுக்கப்படும் 'புல்லட் ட்ரெயின்' படத்தில் நடிக்கவுள்ளார்.

'லாக்டவுனில் 12 கிலோ எடையைக் குறைத்தேன்' - இங்கி. வீரர் சிப்லி

லாக்டவுன் நாள்களில் செய்த உடற்பயிற்சியின் மூலம் 12 கிலோ வரை தனது உடல் எடையைக் குறைத்ததாக இங்கிலாந்து வீரர் சிப்லி தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு - அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை

டெல்லி: கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக ரேஸர்பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details