தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்.

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 15, 2021, 3:24 PM IST

  1. நீட் மரணம் - மேலும் ஒரு மாணவி தற்கொலை

வேலூர்காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா (17) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு எழுதிய பின், இரண்டு நாள்களாக மாணவி விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மதிப்பெண் குறைந்துவிடும் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது.

2. உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை (செப் 16) முதல் இரண்டு நாட்களுக்கு தேமுதிக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

3. இந்தாண்டும் டெல்லியில் பட்டாசுக்கு தடை - கெஜ்ரிவால் கெடுபிடி

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், அதை வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

4. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று (செப். 15) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

5. ஜேஇஇ மெய்ன் தேர்வு முடிவுகள்: 18 மாணவர்கள் முதலிடம், 44 பேர் 100% மதிப்பெண்கள்

ஜேஇஇ முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். 44 மாணவர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

6. ’சேப்பாக்கம் சேகுவேரா...’ - உதயநிதியைத் தாக்கும் ஜெயக்குமார்!

”திரைப்படத்தில் ஜாலியாக இருந்த உதயநிதியை வலுக்கட்டாயமாக சட்டப்பேரவையில் அமர வைத்தால் அவருக்கு போர் அடிக்கத்தான் செய்யும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

7. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி- பாமக திடீர் அறிவிப்பு

நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்துள்ளது.

8. பெங்களூருவில் கோர விபத்து: 30 அடியிலிருந்து விழுந்த இருவர் உயிரிழப்பு

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில், இரு சக்கர வாகனத்தில் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

9. இந்தியாவில் மீண்டும் 25 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 12 நபர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10. மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த நைஜீரியர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை!

மேட்ரிமோனி மூலமாக இரண்டாம் திருமணத்துக்கு பதிவு செய்தவர்களிடம் மோசடி செய்த நைஜீரிய நபர்களை போலீஸ் காவலை எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details