தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்.

By

Published : Sep 12, 2021, 3:02 PM IST

Published : Sep 12, 2021, 3:02 PM IST

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

1. நீட் அச்சத்தால் மாணவர் தற்கொலை- முதலமைச்சர் வேதனை

நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை(செப். 12) சட்டப்பேரவையில், நிறைவேற்றப்படும் என அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

2. 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது - சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசித்து முடிவெடுப்பார் என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

3. ’முதல்ல சர்தார், அடுத்தது பொன்னியின் செல்வன், விருமன்...’ - செம பிஸி ஷெட்யூலில் கார்த்தி!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

4. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தென்மேற்குப் பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

5. ஜி.வி.பிரகாஷின் ’செல்ஃபி’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ’செல்ஃபி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

6. குஜராத்தின் அடுத்த முதலமைச்சர் யார்... கவனமாக காய் நகர்த்தும் பாஜக!

குஜராத் முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் குறித்து யார் என்ற பேச்சு தீவிரமடைந்துள்ளது.

7. கோவை மாநகராட்சியில் 305 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் 305 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

8. நாமக்கல் சிறுமி பாலியல் புகார் - குற்றவாளி உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தேடப்பட்டு வந்த நபர் விசாரணைக்காக அழைத்து வந்தபோது உயிரிழந்தார்.

9. 'நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியவில்லை...' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

”போதிய கால அவகாசம் இல்லாததால் இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியவில்லை. வரும் ஆண்டுகளில் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு நீட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க முயற்சிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

10. விலை உயரும் சி.என்.ஜி: முக்கிய நகரங்களில் அக்டோபர் மாதத்தில் 11% வரை உயர வாய்ப்பு

அக்டோபர் மாதத்தில் வாகன எரிவாயு விலை 10 முதல் 11 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சமையல் எரிவாயு விலை 76 விழுக்காடு வரை உயரும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details