தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 6, 2021, 3:00 PM IST

1, 'சம்சாரம் இல்லாமல் வாழலாம்; மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது'

பென்னாகரம் தொகுதி அதிக பரப்பளவு கொண்டது என்பதால் இங்கு மின்சாரக் கோட்டம் அமைக்க வேண்டும் என்று அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி வேண்டுகோள்வைத்தார்.

2, குடிபோதையில் தகராறு - இளைஞரின் காதை கடித்து துப்பிய கும்பல்

சென்னையில் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டிலை கீழே தள்ளிவிட்டதைத் தட்டிக்கேட்ட இளைஞரின் காதை கடித்து துப்பிய மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

3, நெகமம் சேலைகள் உள்ளிட்ட பாரம்பரிய சேலைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை!

நெகமம் சேலைகள், வீரவநல்லூர் செடி புட்டா சேலைகள் மற்றும் உறையூர் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4, இலவச லேப்டாப் - மாணவர்களுக்கு குட் நியூஸ்

2017-18ஆம் ஆண்டு பயின்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.

5, அரசு ஆவணங்களில் தாய் பெயரை சேர்க்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

அரசுத் துறைகளில் அனைத்து ஆவணங்களிலும் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனிப்பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6, தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு மழை

அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

7, கடை பணியாளர்களுக்கு இருக்கை வசதியை கட்டாயமாக்கும் மசோதா - சட்டப்பேரவையில் தாக்கல்

கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இருக்கை வசதியை கட்டாயமாக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது.

8, #SocialJusticeDay பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி- ராமதாஸ் ட்வீட்

பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் இன்று அறிவித்த நிலையில், பாமகவின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருப்பதில் மகிழ்ச்சி என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

9, மூன்று மாதங்களில் ரூ.23 கோடி மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துகள் மீட்பு

திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் ரூ. 23 கோடி மதிப்புள்ள தமிழ்நாடு வக்பு வாரிய சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

10, பூஸ்டர் டோஸ் அனுமதி கிடைத்ததும் செயல்படுத்துவோம் - அமைச்சர் உறுதி

இரண்டு தவணை செலுத்தியவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கினால் அதைச் செயல்படுத்தும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details