தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS@ 3 PM - ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS @3 PM
TOP 10 NEWS @3 PM

By

Published : May 24, 2021, 3:26 PM IST

தளர்வுகளற்ற ஊரடங்கு: இயல்பு நிலையில் இயங்குகிறதா சென்னை?

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வழக்கமான வாகனப் போக்குவரத்துக் காணப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

அதிமுக, திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்பது பேர் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் இன்று(மே.24) பதவியேற்றுக் கொண்டனர்

ஆதரவற்றோருக்கு ஆறுதல்: ஊரடங்கில் வழக்கம் போல செயல்பட்ட அம்மா உணவகம்

ஈரோடு: தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அனுமதி பெற்று செல்லும் வகையில் அம்மா உணவகம் வழக்கம் போல செயல்பட்டது.

சிவகார்த்திகேயன் தந்தை குறித்து அவதூறு கருத்து: ஹெச்.ராஜா மீது புகார்!

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை இறப்பு குறித்து அவதூறு கருத்து பரப்பிய ஹெச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காய்கறி தொகுப்பு விலைப் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறி தொகுப்பின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியரின் சேட்டைகள் - போர்க்கொடி தூக்கிய முன்னாள் மாணவர்கள்
தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

உருவாகிறது ‘யாஸ்’ புயல்!

ஹைதராபாத்: வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ’யாஸ்’ புயலாக இன்று உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியிலிருந்து சென்னை வந்தடைந்த மூன்று டன் மருத்துவ உபகரணங்கள்

சென்னை: டெல்லியிலிருந்து வந்த இந்திய விமானப்படை விமானங்களில் மூன்று டன் எடையுடைய ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகள், வெண்டிலேட்டா்கள் RT-PCR கிட்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

பாபா ராம்தேவின் அலோபதி சர்ச்சை... ஹர்ஷ் வர்தன் தலையீட்டால் முற்றுப்புள்ளி!

அலோபதி மருந்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய யோகா குரு பாபா ராம்தேவ், அதற்கு மன்னிப்பு தெரிவித்தது அவரின் முதிர்ச்சியைக் காட்டுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்துள்ளார்.

இத்தாலியில் 985 அடி உயரத்தில் இருந்து அறுந்து விழுந்த கேபிள் கார் - 14 பேர் உயிரிழப்பு!

ரோம்: இத்தாலியின் வடக்கே மலைப் பகுதிக்குச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details