தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - chennai district news

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : May 15, 2021, 3:49 PM IST

1 பலத்த சூறாவளி காற்றால் ஐந்தாயிரம் வாழை மரங்கள் சேதம்!

சத்தியமங்கலம் அருகே பலத்த சூறாவளி காற்று வீசியதால் ஐந்தாயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

2 அடுத்த 18 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் ’தவ் தே’

மத்தியக் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள தவ்-தே புயல், அடுத்த 18 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 கரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

அருப்புக்கோட்டையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

4 'கோயம்பேடு சந்தைக்கு வர வேண்டாம்' - அங்காடி நிர்வாகம் வேண்டுகோள்

கோயம்பேடு சந்தை இனி 10 மணி வரை மட்டுமே செயல்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க, பொதுமக்கள் கோயம்பேடு சந்தைக்கு வர வேண்டாம் என சந்தை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

5 ’இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இறப்பு விகிதம் குறைவு’ - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ’கம்போசிசன்’ என்கிற ஆக்ஸிஜனை குறைந்த அளவு பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் ஒருமுறையை சிறப்பாக செய்து வருகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

6 கரோனாவால் உயிரிழந்த முதலமைச்சரின் தம்பி!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் ஆஷிம் பானர்ஜி, சிகிச்சைப் பலனின்றி இன்று (மே.15) உயிரிழந்தார்.

7 அமலுக்கு வந்த வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை - மாற்றமா? ஏமாற்றமா?

பேஸ்புக் நிறுவனம் அதன் வாட்ஸ்அப் செயலியின் விதிமுறைகளையும், தனியுரிமைக் கொள்கைகளையும் மாற்றியமைத்துள்ளது. புதிதாக வகுக்கப்பட்ட கொள்கைகள் பாதுகாப்பானதா? பயனர்களின் தரவுகள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்துப் பார்க்கலாம்.

8 புதுச்சேரியில் 1,598 பேருக்கு கரோனா உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,598 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 கரோனாவின் கோரப்பிடியில் புதுச்சேரி காவல் துறை!

புதுச்சேரி: மேலும் 11 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்ட காவல் துறையினரின் எண்ணிக்கை 286ஆக உயர்ந்துள்ளது

10 கரோனாவால் ஒரே நாளில் 3,890 பேர் உயிரிழப்பு!

நேற்று(மே.14) ஒரே நாளில் மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 98 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details