தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 3 pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm

By

Published : Mar 16, 2021, 3:06 PM IST

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கரோனா தடுப்பு நடவடிக்கை செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

என்னை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்! - டிடிவி.தினகரன்

மக்களின் கருத்துக்கணிப்பு என்ன என்பதையும், தேர்தல் முடிவு என்ன என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம் என அமமுக பொதுச்செயலாளரும் அக்கட்சியின் கோவில்பட்டி வேட்பாளருமான டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

சமக, புதிய தமிழகம் பொதுச்சின்னம் கேட்டு வழக்கு: நாளைக்குள் முடிவெடுக்க உத்தரவு

அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுசின்னம் ஒதுக்குவது தொடர்பாக இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலித்து நாளைக்குள் (மார்ச் 17) தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய லாரி: 3 பேர் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது மண் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமமுக சங்கரன்கோவில், கிள்ளியூர் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு

அமமுக சார்பில் சங்கரன்கோவில், கிள்ளியூர் தொகுதிகளில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தரமற்ற ரேஷன் அரிசியால் எம்எல்ஏவிற்கு ஆரத்தி!

ரேஷன் கடையில் போடப்படும் அரிசியை ஆரத்தி தட்டில் வைத்து ஓட்டு கேட்க வந்த சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளரை பொதுமக்கள் வரவேற்றனர்.

ரேஸ் கோர்ஸில் நடைப்பயிற்சி: கோவையில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்த கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடைப்பயிற்சி மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அரசியல் எங்களுக்குத் தொழில் அல்ல, கடமை - கமல்ஹாசன் பதிலடி!

அரசியல் தொழில் அல்ல, கடமை என பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு, கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

IND vs ENG, மூன்றாவது டி20: பேட்டிங்கில் கவனம் செலுத்தும் இந்தியா

டி20 தொடரை மோசமான தோல்வியுடன் தொடங்கியபோதிலும், அதிலிருந்து உடனடியாக மீண்டு இரண்டாவது போட்டியில் வெற்றிக்கணக்கை தொடங்கிய இந்திய அணி, அதை தக்க வைத்துக்கொள்ள பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக செயல்படும் எனத் தெரிகிறது.

ஒசாகா சர்வதேசத் திரைப்பட விழாவில் அசுரன்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம், ஒசாகா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details