தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - tamilnadu latest news

ஈ டிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 3 pm
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Mar 13, 2021, 3:11 PM IST

2021 சட்டப்பேரவை தேர்தல்; நீட் தேர்வு ரத்து, திருக்குறள் தேசிய நூல், கலைஞர் உணவகம்- திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!

2021 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கையை மு க ஸ்டாலின் இன்று கட்சியின் தலைமையகத்தில் வெளியிட்டார்.

ஊடகக் கண்காணிப்பு மையத்தில் ஆட்சியர் சாந்தா ஆய்வு

ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகக் கண்காணிப்பு மையத்தில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தா ஆய்வு மேற்கொண்டார்.

கோயிலில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் பணி வழங்கும் விவகாரம்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

மலைக்கோட்டை தாயுமானசாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்ப பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் அவ்வழக்கை முடித்து வைத்தனர்.

ஒரே வாரத்தில் இரண்டு முறை தடம் புரண்ட ரயில்!

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலையின் அருகே உள்ள தண்டவாளத்தில் இரண்டாவது முறையாக ரயில் தடம் புரண்டது.

கள்ளக்குறிச்சியில் 4ஆவது நாளாக நீடிக்கும் அதிமுகவினர் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி 40க்கும் மேற்பட்ட நகர நிர்வாகிகள் ராஜினாமா கடிதம் வழங்கி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் முதன் முதலாக வேட்பு மனு தாக்கல் செய்த வித்தியாசமான நபர்!

திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் வித்தியாசமான வேட்பாளர் ஒருவர் முதன் முதலாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நடுரோட்டில் ரகளை; காவல் ஆய்வாளரை தாக்க முயற்சி - தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

எழும்பூர் அருகே நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டு, விசாரிக்க சென்ற ஆய்வாளரை தாக்க முயன்ற தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

'தவறுகளை ஒப்புக்கொண்டு சரியான நோக்கத்துடன் வீரர்கள் மீண்டு வரவேண்டும்' - கோலி

"தவறுகளை ஒப்புக்கொண்டு சரியான நோக்கத்துடன் இந்திய வீரர்கள் மீண்டு வர வேண்டும்" என இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அடைந்த தோல்விக்குப் பின்னர் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

கோவாவில் காதலியைக் கரம்பிடிக்கவிருக்கும் பும்ரா!

ஜஸ்பிரீத் பும்ரா தனது காதலியும் தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசனை இந்த மாதம், கோவாவில் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details