தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - Top 10 news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3 PM
Top 10 news @ 3 PM

By

Published : Nov 16, 2020, 3:13 PM IST

1. 6.10 கோடி வாக்காளர்களைக் கொண்ட தமிழ்நாட்டின் வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் 6.10 கோடி வாக்காளர்கள் உள்ளதாக வாக்காளர் வரைவுப் பட்டியலை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

2. வரும் 23 இல் திமுக உயர்நிலை திட்டக் குழுக்கூட்டம்!

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

3. மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையா..? - பரபரக்கும் தேர்தல் அரசியல் களம்

மு.க. அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களுடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதையடுத்து தேர்தல் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

4. கார்த்தி சிதம்பரம் மீதான வரி ஏய்ப்பு வழக்கு: வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்!

கார்த்தி சிதம்பரம் மீதான வரி ஏய்ப்பு வழக்கில், வருமான வரித்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

5. வாசன் ஐ கேர் நிறுவனர் மாரடைப்பால் மரணம்!

வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் நிறுவனத் தலைவர் அருண் (52) மாரடைப்பால் உயிரிழந்தார்.

6. சீட்டுப் பண தகராறால் தீக்குளித்தவர் உயிரிழப்பு - சிசிடிவி வெளியீடு

சீட்டுப் பணம் முழுமையாக கிடைக்காத விரக்தியில் தீக்குளித்த நபர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

7. 'நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவை புறக்கணிப்போம்'- தேஜஸ்வி யாதவ்

நிதிஷ் குமார் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

8. 'போடு ரகிட...ரகிட.. ரகிட' - 'மவுனியா' ஆட்டம் ஆடி தெறிக்கவிட்ட உ.பி. மக்கள்

உத்தரப்பிரதேச மாநிலம், புண்டேல்கண்ட் பகுதியில் மிகப்பிரபலமான 'மவுனியா' நடனம், அப்பகுதி மக்களால் ஆடப்பட்டது.

9. 'நான் தான் வென்றேன்' - பரோட்டா சூரி போல முதலில் இருந்து கிளம்பிய ட்ரம்ப்!

'அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் தான் வெற்றிப்பெற்றேன்' என குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

10. 'அனுஷ்கா தனது நாயை கட்டுப்படுத்த தேவையில்லை'- விராத் கோலிக்கு காங்கிரஸ் ஆதரவு!

“அனுஷ்கா உங்களின் நாயை கட்டுப்படுத்துங்கள்” என்று விராத் கோலியை ட்விட்டரில் சிலர் ட்ரோல் செய்துவரும் நிலையில், அனுஷ்கா தனது நாயை கட்டுப்படுத்த தேவையில்லை என்று கூறிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் உதித் ராஜ், உங்களின் மரபணுவிலே பிரச்னை உள்ளது முட்டாள்களா என்று விராத் கோலியை ட்ரோல் செய்தவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details